கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் நாகம்மாள். இன்னலையில் இவருக்கு 14 வயதாகும் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அந்த பெண் குழந்தை ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் நாகம்மா அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கும் காலிகுட்டை மலை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஷ் என்று என்ற நபருக்கும் திருமணம் செய்து வைப்பதாக நாகம்மாள் உறுதியளித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு இருந்தே சிறுமி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி பெங்களூருவில் நாகம்மா மாதேஷ் மற்றும் 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு சிறுமியின் தாயார் ஆன நாகம்மா மீண்டும் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..
ஆனால் 14 வயது சிறுமியோ, மனதிற்கு ஒவ்வாத திருமணத்தை செய்து விட்டு செய்வது அறியாமல் தவித்து நின்று உள்ளார். அப்போது ஆறுதலாய் அவரது மனதில் எட்டிய ஒரே ஒளியாக தெரிந்தது அவரது பாட்டியின் வீடு. மாதேஷ் வீட்டிலிருந்து தப்பித்து தனது பாட்டியின் கிராமத்திற்கு சென்று தனது பாட்டியுடன் இருந்துள்ளார் அந்த சிறுமி.

திருமணம் முடிந்த கையோடு வீட்டிற்கு வரும் முன்பே அந்த சிறுமி மாதேஷ் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்ததனால் ஆத்திரமடைந்துள்ளார் மாதேஷ். சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த மாதேஷ், அவரது சகோதரருடன் சிறுமி இருக்கும் இடத்திற்குச் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக இருவரும் இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த கிராம மக்கள், சமூக வலைதளத்தில் பதிவிடவே இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பூகம்பம்மாக வெடித்தது. இந்த வீடியோவை பார்த்த குழந்தை நலவாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சிறுமியின் பாட்டியிடம் புகாரை பெற்று மாதேஷ் மற்றும் அவரது சகோதரர் மற்றும் சிறுமியின் தாயார் நாகம்மாவை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..