அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை கடந்த 3ம் தேதி நடைமுறைப்படுத்தினார். இந்தியா மீது 26 சதவீதம் வரிவிதித்திருந்தார். ஆனால், உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 90 நாட்களுக்கு அந்த வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். ஆனால், சீனாவுக்கு மட்டும் வரிவிதிப்பு தொடரும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க விதித்த 34 சதவீத வரிவிதிப்புக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க இறக்குமதிக்கு 34 சதவீதம் வரிவிதித்தது. ஆனால், பொறுமை இழந்த அதிபர் ட்ரம்ப் சீனா பேச்சுவார்த்தைக்கு வந்தால் வரியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால், சீனா தரப்பில் இறுதிவரை மோதிப் பார்த்துவிடுவோம் என்று கூறி வரிவிதிப்பை நீக்கவில்லை. இதையடுத்து, சீனா மீது கூடுதலாக 54 சதவீதம் வரிவிதித்து 104 சதவீதமாக உயர்த்தியது.
இதையும் படிங்க: சீனாவுக்கு 125% வரி.. போட்டுத் தாக்கிய டிரம்ப்..!
இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு கூடுதலாக வரிவிதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.இதனால் சீனாப் பொருட்களுக்கான வரி 145 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று சமூக ஊடகத்தில் பதிவிட்ட செய்தியில் “என்னுடைய வரிவிதிப்பு கொள்கையில் பரிமாற்றச் செலவும் சேரும். பரிமாற்றத்தில் சிக்கல்கள் இருக்கின்றன. இந்த வரிவிதிப்பு தொடர்ந்து அழகாக இருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியானதும் அமெரிக்க பங்குச்சந்தையான் வால்ஸ்ட்ரீட் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது.
வெள்ளை மாளிகை தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குநர் கெவின் ஹெசட் கூறுகையில் “அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. அதிபர் ட்ரம்ப் அடுத்த முடிவாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார். சீனா என்ன செய்கிறது என்று பொறுமையாகப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்புக்குப்பின் அமெரிக்கப் பங்குச்சந்தை சரிந்தநிலையில் மீண்டும்நேற்றுமுன்தினம் உயர்ந்தது. ஆனால் சீனா மீது கூடுதல்வரி, பரிமாற்றக் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படும் என்று அறிவித்தபின், சந்தையில் மீண்டும் சரிவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அமெரிக்கா - சீனா இடையே வலுக்கும் வர்த்தகப் போர்.. மாறி மாறி வரி விதிப்பு.. உச்சக்கட்டத்தில் மோதல்.!!