×
 

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் சொத்து பாகப்பிரிவினை வழக்கு... ஏவி மெய்யப்பன் பேரன், கொள்ளுப்பேத்தி இடையே கருத்து வேறுபாடு..!

ஏவிஎம் புரொடக்சன்ஸின் சொத்து பாகப்பிரிவினை வழக்கில், ஏவி மெய்யப்பனின் பேரன், கொள்ளுப்பேத்திக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சொத்து பாகப்பிரிவினை செய்யக் கோரி ஏ.வி.எம். புரொடக் ஷன்ஸ் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பன் கொள்ளுப்பேத்தி தாக்கல் செய்த வழக்கில் ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பேரன் குகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

தமிழகத்தின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனர் மெய்யப்பனின் கொள்ளு பேத்தி அபர்ணா குகன் ஷியாம், பாகப்பிரிவினை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது தந்தை குகன், ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாகவும், அதன் லாப நஷ்டம் முழுக்க ஏ.வி.எம். நிறுவனத்துக்கு செல்லும் வகையில் பங்குதாரர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகையை ஏமாற்றி சீமான் உறவு... 6-7 முறை கருக்கலைப்பு... உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

ஆனால், ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் தன்னை பங்குதாரராக சேர்க்கவில்லை. அதனால் குடும்ப சொத்துக்களில் தனக்கு உரிய பங்கை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அபர்ணாவின் தந்தை குகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.  

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு,   மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி அபர்ணா தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தது.
 

இதையும் படிங்க: விசாரணை என்கின்ற பெயரில் போலீஸார் செய்யும் கொடுமையை  அனுமதிக்க மாட்டோம்...உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share