×
 

மகனை பறிகொடுத்த பாரதிராஜா..! நேரில் ஓடோடி சென்று ஆறுதல் சொன்ன முதல்வர்..!

மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். 48 வயதான மனோஜ் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இயக்குநராகவும் இருந்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த மனோஜ், ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர், ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்து இருந்தார்.

இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்.. கூட்டு நடவடிக்கைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

கடந்த மாதம் மனோஜிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் 2 ,3 தினங்களாக உடல் நிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளது. நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்துது.நடிகர் மனோஜின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் மனோஜிற்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனோஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தொடந்து மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நீலகிரி மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share