×
 

சாமியார் தோற்றத்தில் பவன் கல்யாண்.. இமய மலைக்கு போறீங்களா?.. பிரதமர் மோடி தமாஷ்..!

டெல்லியில் நடைபெற்ற பாஜக புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் நடிகர் பவன் கல்யாண் சாமியார் தோற்றத்தில் பங்கேற்றார்.

நேற்று டெல்லி நடைபெற்ற பாஜக புதிய முதல்வர் ரேகா குப்தா பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி கட்சி முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் ஆட்சியைப் பிடித்த மகிழ்ச்சியில் பிரதமர் மோடி, விழாவிற்கு வருகை தந்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் உற்சாகமாக வரவேற்று அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

மகாராஷ்டிராவின் துணை முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் அவர் அன்பாக பேசி நலம் விசாரித்தார். ஆந்திராவின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் சாமியார் தோற்றத்தில் இந்த விழாவிற்கு வந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் பேசியது மட்டும் சற்று வித்தியாசமாக இருந்ததை ஊடகவியலாளர்கள் கவனித்தனர். 

பின்னர் பவன் கல்யாணிடம் "பிரதமரிடம் என்ன பேசினீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த பவன் கல்யாண், "பிரதமர் மோடி எப்போதுமே என்னுடன் நகைச்சுவையாக பேசுவார். இன்று எனது தோற்றத்தைபார்த்து அவர், "நான் எல்லாவற்றையும் துறந்து விட்டு இமயமலைக்கு செல்கிறேனா?" என்ற சந்தேகத்தில் கேட்டதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: பழனி டு திருப்பதிக்கு மீண்டும் பஸ் சேவை; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சொன்ன குட்நியூஸ்..!

அதற்கு  பிரதமரிடம், தான் இன்னும் எங்கும் செல்லவில்லை என்று உடனடியாக அவர் உறுதி அளித்தார். அதைச் தொடர்ந்து பிரதமர், "இங்கு இன்னும் செய்ய வேண்டிய (மக்களுக்கு) பணிகள் நிறைய உள்ளன" என்று நகைச்சுவையாக என்னிடம் தெரிவித்தார். இமயமலையை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்கிற வகையில் இமயமலை காத்திருக்க முடியும் என்று மீண்டும் தமாசாக என்னிடம் பிரதமர் தெரிவித்தார்" என்றார். 

எளிமையான பருத்தி ஆடைகளை அணிந்து தனது தீட்சையின் (ஆன்மீக பயிற்சி) ஒரு பகுதியாக பக்தி வாழ்க்கையை நடத்தி வருகிறார், பவன் கல்யாண்.  தென்னிந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கும் அவர் உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கூட பங்கேற்று ஆசி பெற இருக்கிறார்.

டெல்லி முதலமைச்சர் ரேகாகுப்தா பதவியேற்பு விழா,  வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் மூன்று அலங்கார மேடைகள் அமைக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமான கோலாகலத்துடன் நடந்து முடிந்தது. அவருடன் ஆறு சக அமைச்சர்களும் பதவி ஏற்றனர். டெல்லியின் நான்காவது முதல்வரான ரேகா, 50 வயதான முதல் முறை எம் எல் ஏ ஆவார். 

நாடு முழுவதும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முதல் அமைச்சர்களில் இவர் ஒருவர்தான் பெண் என்ற பெருமையும் நேற்றைய பதவி ஏற்பு விழாவின் மூலம் அவருக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: அரசியல் கோமாளி அண்ணாமலையே.. கெட் அவுட் மோடின்னு துரத்துவோம்.. திமுகவின் ராஜீவ் காந்தி ஆவேசம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share