×
 

இந்து அமைப்பினர் விரட்டி, விரட்டி கைது... வீடு, வீடாக புகுந்து அலோக்காக தூக்கும் காவல்துறை! 

மதுரை மாவட்டம் முழுவதிலும் இந்து அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காவல்துறையால் முன்னெச்சரிக்கை கைது செய்யப்பட்டுள்ளனர். 

xமதுரை மாவட்டம் முழுவதிலும் இந்து அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காவல்துறையால் முன்னெச்சரிக்கை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் 22ம் தேதி இந்திய முஸ்லீம் கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று அசைவ உணவை உட்கொண்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதுகுறித்து விளக்கம் அளித்த நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவிற்கு சமைத்த அசைவ உணவைக் கொண்டு செல்ல தடையில்லை என்றும், உயிருடன் விலங்குகளை எடுத்துச் சென்று பலியிட மட்டுமே தடை இருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார். 

இதனைக் கண்டித்து, இன்று திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இரு மதங்களுக்கு இடையே அசாதாரண சூழலை தவிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா  நேற்றும், இன்றும்144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார்.. ஹெச். ராஜா அதிரடி கணிப்பு

இதன் அடிப்படையில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வருகிறார்கள். இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் மற்றும்  தனியார் விடுதிகளில் தங்கி இருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினரை மாவட்டம் முழுவதிலும் 50-க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பு காவலில் காவல்துறையினர் வைத்து உள்ளனர்.

இதேபோல்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பகவடிவேல் மற்றும் நிர்வாகி செந்தில்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பையா உட்பட 8 பேரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலில் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரம் எம்.பி. பதவியை ராஜினாமா பண்ணுங்க.. நவாஸ் கனியை நெருக்கும் அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share