×
 

கூட்டுக்குழுவில் தரமான சம்பவம்… தாய்மொழிக்கு முக்கியத்துவம்: தலைவர்களை அசத்திய மு.க.ஸ்டாலின்!

தாய்மொழியில்  தலைவர்கள் பெயர் பலகை வைத்து மொழி உரிமையை நிலை நாட்டும் முதல்வரின் ஸ்டாலினின் பாங்கு என பலரும் பாராட்டி வருகின்றனர். 

கூட்டுக் குழுவில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்பலகை  அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியுடன் ஆங்கிலத்திலும் தலைவர்களின் பெயர் பலகை இடம்பெற்றுள்ளது.

நடைபெற்று வரும் தொகுதி மறுவரையரை தொடர்பான கூட்டுக் குழு கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாமர்த்தியத்தை எடுத்துக் காட்டுவதாகவும், அவரவர் தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் பலரும் பாராட்டி வருகின்றனர். 

கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களின் இருக்கைக்கு முன் வைக்கப்பட்டிருந்த மேஜைகளில் அவர்களது பெயர்கள், ஆங்கிலத்திலும், அவரவர் தாய் மொழியிலும் பெயர் பலகைகைகள் வைக்கப்பட்டிருந்தன

இதையும் படிங்க: மோடி செலவைதான் பார்ப்பீங்க.. 4 ஆண்டுகளில் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவு தெரியுமா..?

.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் உள்ளிட்ட பேரில் 7 மாநில முதல்வர்கள் மட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்து துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.எஸ்.பொன்னண்ணா ஆகியோரும், ஆந்தராவில் இருந்து ஒய்.ஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மிதுன் ரெட்டி, ஜனசேனா கட்சியின் உதய் ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தெலங்கானாவில் இருந்து முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மகேஷ் குண்ட், பாரதிய ராஷ்ட்ரிய சமிதியின் கே டி.டி ராமராவ், பி.வினோத்குமார், ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஈத்தியாஸ் ஜலீல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய குமார் தாஸ், அமர் பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் பக்த சரண்தாஸ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலத்தில் இருந்து  முதலமைச்சர் பகவந்த்மான், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் சிரோமணி, அகாளிதளம் கட்சியின் தல்ஜித் சிங் சீமா மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். 

அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு முன்னாள் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த  பெயர்பலகைகளில் அவர்களைச் சார்ந்த மாநில மொழியிலும், ஆங்கிலத்திலும் பெயர்கள் பொறிக்கப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதுதான் அந்தந்த தலைவர்கள் சார்ந்த தாய்மொழியில்  தலைவர்கள் பெயர் பலகை வைத்து மொழி உரிமையை நிலை நாட்டும் முதல்வரின் ஸ்டாலினின் பாங்கு என பலரும் பாராட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்..! அதிரடியை ஆரம்பித்தார் அண்ணாமலை.. பாஜக நாளை கருப்புகொடி போராட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share