×
 

NDA கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே தமிழர் ஜி.கே.வாசன்..! பீகார் வங்காளத்தை தட்டித் தூக்க கூட்டத்தில் முடிவு..!

NDA கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே தமிழர் என்ற பெருமையை பெற்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் மற்றும் கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர், இந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு தமிழர் மட்டும் தான் கலந்து கொண்டார் அவர்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி கே வாசன். இவர் தவிர தமிழகத்திலிருந்து எந்த கட்சிக்கும் அழைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லையாம் மேலும் தமிழ்நாட்டுச் சேர்ந்த கூட்டணி கட்சிகளில் யாரும் எம்.பி,எம்.எல்.ஏ போன்ற பதவியில் இல்லாததும் ஒரு காரணமாம் 

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் NDA ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட  கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். (பிப்ரவரி 20) டெல்லியில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது, டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் அவரது அமைச்சரவையின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு இந்த கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பிரபல லேடி டான் சோயா கான் கைது..! ரூ.1 கோடி ஹெராயினுடன் தட்டி தூக்கிய போலீஸ்..!

கூட்டத்திற்குப் பிறகு, பாஜக பொதுச் செயலாளர் வினோத் தவ்டே கூறுகையில், பிரதமர் மோடி முன்னிலையில், முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் சேர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள், பீகார், அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஒற்றுமையாகவும் வலுவாகவும் போட்டியிடத் தீர்மானித்தனர்.

தவ்டே மேலும் கூறுகையில், "அனைத்து முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு டெல்லிக்கு வந்திருந்தனர். பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது, அதில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பாஜகவின் வெற்றிக்காக அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

பீகாராக இருந்தாலும் சரி, மேற்கு வங்கமாக இருந்தாலும் சரி, வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வலுவாகப் போராட அனைத்து NDA தலைவர்களும் முடிவு செய்தனர். அனைத்து கட்சிகளும் NDA கொடியின் கீழ் தேர்தலை சந்திப்பார்கள் என்று பிரதமரிடம் அவர்கள் உறுதியளித்தனர்.

மகாராஷ்டிரா, டெல்லி போல ஒவ்வொரு தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று தலைவர்கள் பிரதமரிடம் கூறினர். "இந்தியாவை வளர்க்கும் இலக்கை நாம் அனைவரும் ஒன்றாக சென்று அடைவோம்" என்று பிரதமர் மோடி கூட்டணித் தலைவர்களிடம்  கூறினார். என பாஜக தலைவர் தாவ்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார் 
 
இந்தக் கூட்டத்தில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாமியார் தோற்றத்தில் பவன் கல்யாண்.. இமய மலைக்கு போறீங்களா?.. பிரதமர் மோடி தமாஷ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share