×
 

தவெகவில் 40 பேர்தான் ரெடி… அதிமுக கூட்டணிதான் சரி... பி.கே எண்ட்ரி… விஜய்க்கு முட்டுக்கட்டை..!

அதிமுக கூட்டணி மட்டுமே வெற்றிக்கு கைகொடுக்கும் என்று கூறி விஜய் சம்மதிக்க வைக்க இரு தேர்தல் வியூக வகுப்பாளர்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

2026-ல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கட்சியை தொடங்கிய விஜய், வியூக வகுப்பாளர்களால்தான் அரசியல் வெற்றி சாத்தியமாகும் என்கிற ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார். இந்நிலையில், அதுவே அவருக்கு நெருக்கடியாகவும் மாறி உள்ளது. ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் என தனித்தனியாக மூன்று பேரின் வியூக ஆலோசனையை நம்பி விஜயின் அரசியல் களம் நகரத் தொடங்கியுள்ளது.

கட்சி தொடங்கியதில் இருந்தே விஜய்க்கு வியூகம் வகுத்து தரும் பணியில் ஜான் ஆரோக்கியசாமி ஈடுபட்டு வருகிறார். வாய்ஸ் ஆப் காமன் என்கிற வியூகம் வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்த நிலையில் மோடி, மம்தா பானர்ஜி, தமிழகத்தில் 2021 சட்டமன்றததேர்தலில் திமுகவின் ஸ்டாலின் ஆகியோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்த பிரபல தேர்தல் வீயூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜயின் வீட்டுக்கே அழைத்து  சென்றார் ஆதவ் அர்ஜூனா.

 

 

அந்த சந்திப்பில் குடும்பத்திற்கு ஒரு வாக்கு பெறும் வகையில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாது.இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க வேண்டும் என்பதையே தேர்தல் வியூக வகுப்பாளர்கள் ஜான் ஆரோக்கியசாமி, பிரசாந்த் கிஷோரின் நிலைப்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக விஜயை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இரு தேர்தல் வியூக வைப்பாளர்களும் மும்மரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மக்கள் பிரச்சனையை கையிலெடுங்க..! கட்சியை சரி செய்யுங்க.. விஜய்யிடம் சொன்ன பிகே.. என்ன நடந்தது பேச்சு வார்த்தையில்?

தனித்து களமிறங்கும் போது உள்ள சவால்கள் குறித்து இரு தேர்தல் வீக வகுப்பாளர்களிடமும் பல்வேறு கோணத்தில் கேள்வி கேட்டால், அதிமுக கூட்டணி ஒன்றே வெற்றியை சாத்தியப்படுத்தும் என்ற பதிலை மட்டும் விஜய் இடம் உறுதியாக தெரிவித்து வருகிறார்களாம். தற்போதைய சூழலில் தவெகவில் வெறும் 40 பேர் மட்டுமே தேர்தலில் களமிறங்க தயாராக உள்ளதாகவும், தேர்தலில் செலவழிக்கும் அளவிற்கு கட்சி நிர்வாகிகளிடம் பணபலம் இல்லை என்கிற காரணத்தைக் காட்டி அதிமுக கூட்டணி மட்டுமே வெற்றிக்கு கைகொடுக்கும் என்று கூறி விஜய் சம்மதிக்க வைக்க இரு தேர்தல் வியூக வகுப்பாளர்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

 முன்னதாக விஜயுடனான சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் இரு தரவுகளை வைத்து ஆலோசனை தந்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு தரவு 2021 ஆம் ஆண்டு திமுக பணியாற்றியபோது திரட்டிய பழைய தரவை வைத்து விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார் என்றும் கூறி வருகின்றனர். பிரசாந்த் கிஷோருடனான இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 விசிகவில் இருந்து விலகிய பின்னர் விஜயை சந்திக்க ஆதவ் அர்ஜுனா முயற்சி எடுத்ததாகவும், அந்த சந்திப்பிற்கு முட்டுக்கட்டை போட்ட ஒரே காரணத்திற்காக பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ்...பிகே-விஜய் சந்திப்பின் பின்னனி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share