முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.அதில், நம் உயிர் நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்பது எனக் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அதனை எதிர்க்கிறோம் என கூறியுள்ள அவர், இந்தி படிக்காதே என்று யாரையும் தடுக்கவில்லை, ஆனால், இந்தியை எங்கள் மீது திணிக்காதே என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை என்றும் அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ED, income tax, போர்டுல கருப்பு பெயிண்ட் அடிக்க சொல்லுங்க பார்க்கலாம்..! திமுக மீது அண்ணாமலை அட்டாக்..!
எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதற்கு எதிரான போராட்டம் தொடரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு என்றும் ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் ரத்தத்தில் ஊறிய உணர்வு எனவும் உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம் என்ன திட்டவட்டமாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தாய்மொழியை அடிப்படையாகவும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக கடைபிடித்து வருகிறது தமிழ்நாடு. தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து.. தரைமட்டமான பட்டாசு ஆலை.. 3 பெண்கள் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்..!