மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தம் கிணறு மிகவும் புகழ் பெற்றது. நீ நிலையில் இந்த கிணற்று நீர் தூர்வாரும் பணி கடந்த 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட காணிக்கைகள் 70 மூட்டைகள் மற்றும் ஒன்பது பெட்டிகளில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக கிணறு தூர்வாரும் பணி நடைபெற்ற போது, இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழுவினர், மிரசுதாரர்கள் என அதிகாரிகள் யாரும் இல்லாதது தெரிய வந்தது. கோவில் செயல் அலுவலர் சந்திரமதி கணக்கர் மகேந்திரன் ஆகியோர் தணிச்சையாக கிணறு தூர்வாரும் பணியை செய்ததாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து நேற்று முன்தனம் கோவை மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் செயல் அலுவலர் சந்திரமதியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா கூறுகையில், கோவிலின் கிணறு தூர்வாரப்பட்டு காணிக்கை எடுத்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரி உத்தரவின் பெயரில் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு..துள்ளி குதிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்..

கிணறு தூர்வாரி காணிக்கைகளை எடுப்பதை இந்து அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் அறங்காவலர்கள் ஆகிய முன்னிலையில் தான் செய்ய வேண்டும். ஆனால் கோவில் செயல் அலுவலர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக செய்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது தொடர்பாக கோவில் செயல் அலுவலரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளே நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 1000 FBI ஏஜென்ட்களை தண்ணி இல்லா காட்டுக்கு தூக்கி அடித்த காஷ் பட்டேல்..! பகவத் கீதை மீது சத்தியம் செய்து பிரமாணம்..!