தமிழ்நாட்டில் கழுகுகள் இனம் அழிந்து வருவதைத் தடுக்கவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகள் வாழ்விட மேம்பாடு பகுதிகளை உருவாக்க கோரியும் வண்டலூரைச் சேர்ந்த சூர்யகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு வனத்துறை தலைமை வன பாதுகாப்பாளர் சீனிவாச ராமசந்திரன் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமலை அருகே பெத்திகுட்டை என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காயமடைந்த யானைகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவை போன்ற வன விலங்குகளுக்கு அறுவை சிகிச்சை, நோய் கண்டறிதல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும்.
இதையும் படிங்க: பொன்முடி மீது சேற்றை வீசிய பாஐக பிரமுகர்.. ஜாமீன் வழக்கில் காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
மேலும், காயமடைந்த கழுகுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வன விலங்குகளுக்காக செயல்படும் வகையில் மையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கழுகுகள் வாழ்விடமான நீலகிரி உயிரின வனப்பகுதிக்கு அருகில் இந்த மையம் உள்ளதால், கழுகுகளை மீட்கவும் அவற்றை பாதுகாக்கவும் முடியும்.

தற்போது இந்த மையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், இதுவரை எந்த கழுகும் மீட்கப்பட்டு சிகிச்சை தரப்படவில்லை. கடந்த 2020 முதல் 2025 வரை விஷம் ஏறி பாதிக்கப்பட்ட 4 கழுகுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் இறந்துபோன விலங்குகளை உண்ணும் கழுகுகள் இயற்கையாகவே வனத்தை தூய்மைப் படுத்தி வருகின்றன.
கழுகுகள், காட்டு விலங்குகள் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியவை. அதனால், இவற்றுக்கு இயற்கையாகவே உணவு கிடைத்துவிடும். கழுகுகள் எண்ணிக்கை, இனம், வாழ்விடம் குறித்து தமிழ்நாடு வனத்துறை புள்ளி விபரங்களைச் சேகரித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாடு வனத்துறை, கேரள மாநில வனத்துறை, ஆராய்ச்சி மையங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் குடும்பம் குறித்து அவதூறாக பதிவிட்டவர்.. நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..