பசு பாதுகாப்பை ஊக்கப்படுத்தும் திட்டங்கள், ஆதரிக்கும் துணைத் தொழில்களான பசுவின் சாணத்தில், சிறுநீரில் செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்தல், பெயிண்ட் உள்ளிட்டவற்றை ஊக்கப்படும் திட்டத்தையும் ஹரியானா முதல்வர் நயாக் சிங் ஷைனி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பசு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு மனோகர் லால் கட்டார் ஆட்சிக்கு வந்தபின் பசுபாதுகாப்பு சட்டங்கள், சாலைகளில் திரியும் மாடுகளை பராமரிக்கும் திட்டங்களை செயல்படுத்தினார். அதேபோல, பசுக்களை கொலை செய்யும், இறைச்சிக்காக அழைத்துச் செல்வோரை கண்காணிக்கும் அமைப்புகளையும் அரசு சட்டத்துக்குள் கொண்டுவந்து, பசு பாதுகாப்பாளர்கள் நடத்தும் வன்முறை, தாக்குதல்களையும் கட்டுப்படுத்தியது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் “கவ் சேவா அயோக்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு, அது பாஜகவின் ஆட்சியில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது. இதற்காக ஹரியானா பசு சேவை சட்டம் 2010 கொண்டுவரப்பட்டு, இணையதளமும் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் “ சட்டத்தை முறையாக அமல்படுத்துவதும், பசுக் கொலையை தடுப்பதும், கொடூரச் செயல்களை தடுப்பதும்தான்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஹரியானா அரசு பசு பாதுகாப்புக்கான தொகையை, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்கு பசு சேவை வாரியத்தின் தலைவர் ஷர்வண் கார்க் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம்.. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தாராளம்!

அவர் கூறுகையில் “ காங்கிரஸ் ஆட்சியின் போது மாநிலத்தில் 215 பதிவு செய்யப்பட்ட கோசாலைகள் செயல்பட்டன, அதில் 1.75 லட்சம் பசுக்கள், மாடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால், பாஜக ஆட்சிக்குவந்தபின் பசு பாதுகாப்பு மையங்கங்கள் அல்லது கோசாலைகள் 1.74 லட்சமாக அதிகரித்துள்ளன, 4.50 லட்சம் பசுக்கள், காளை மாடுகளாக உயர்ந்துள்ளன. சாலைகளில் 1.50லட்சம் மாடுகள் திரிந்த நிலையில் தற்போது 40ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது, மார்ச் 31ம் தேதிக்குள் முற்றிலுமாக குறைக்கப்படும்
பசு பாதுகாப்புக்கு தனியார் அமைப்புகளும், நிறுவனங்களும் உதவுகின்றன. ஆர்கானிக் பெயின்ட், உரங்கள் தயாரிக்கவும் சாணம், கோமியம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றன” எனத் தெரிவித்தார்.
ஹாரியானா அரசு, ஒரு கன்றுக்குட்டியை பராமரிக்க ரூ.300, பசு ஒன்றுக்கு ரூ.600, காளை மாடு ஒன்றுக்கு ரூ.800 மானியமாக கோசாலைகளுக்கு வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாடகை வீட்டை ஆட்டையைப் போட பார்த்த பாஜக நிர்வாகி...! பட்டாவை மாற்றி எழுதி போர்ஜரி!