×
 

டாஸ்மாக்கில் மட்டும் 3 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ஊழலா..? ED-யை கிழித்தெடுத்த சீமான்..!

இப்போது நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில், டாஸ்மார்க் நிறுவனத்தில் எவ்வளவு கைப்பற்றினோம்? என்ன ஆவணங்கள் சிக்கியது? எனச் சொன்னார்களா?  

''வருமான வரி சோதனையா, உள்ளே போறது மட்டும்தான் தெரிகிறது. அங்கே என்ன கிடைத்தது? எதை எடுத்தீர்கள்? என்னென்ன சிக்கியது?'' என்பதை அவர்கள் தெரிவிப்பதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''திமுக ஆட்சியில் ஊழல் நடப்பது ஒரு இடத்தில் மட்டும்தானா? வருமானத் துறையோ, அமலாக்கத்துறையோ வந்து சோதனை செய்கிறார்கள். ஆனால், சோதனையில் இவ்வளவு நாங்கள் எடுத்தோம், இவ்வளவு ஆவணங்களை கைப்பற்றினோம், இவ்வளவு பணமாக எடுத்து இருக்கிறோம் என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், மக்கள்  வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள். நீங்கள் மக்களுக்கு முன்னாடி சொல்ல வேண்டும். அதுதான், அதிகாரம், அதுதான் மக்களுக்கான அதிகாரம். ஆனால் அவர்கள் எதையும் சொல்ல மாட்டார்கள்.

வருமான வரி சோதனையா, உள்ளே போறது மட்டும்தான் தெரிகிறது. அங்கே என்ன கிடைத்தது? எதை எடுத்தீர்கள்? என்னென்ன சிக்கியது? வண்டியில என்ன எடுத்தீர்கள்? எவ்வளவு ஆவணங்கள்? பணமாக எவ்வளவு? நகையாக எவ்வளவு? என்று எதுவும் சொல்வதில்லை. இப்போது நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில், டாஸ்மார்க் நிறுவனத்தில் எவ்வளவு கைப்பற்றினோம்? என்ன ஆவணங்கள் சிக்கியது? எனச் சொன்னார்களா?  

இதையும் படிங்க: பிரதமர திட்டினா கூட அவரோட கெத்து வேற லெவல்..? சீமானை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்த அண்ணாமலை..!

ஊடகங்கள்தான் ஒரு லட்சம் கோடி ஊழல் எனச் சொல்கிறது. இப்படி மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி கொள்ளை அடித்தால் என்ன ஆகும்? என்று யோசித்துப் பாருங்கள். கொள்கை மொழி என்பது அவரவர் தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் பயிற்று மொழி. அதுதான் எல்லா மொழியாக இருக்க வேண்டும். பயன்பாட்டு மொழியாக நம்மை வெள்ளைக்காரன் ஆண்டதினால் நாம் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்துக் கொண்டோம். வேண்டுமென்றால் உலகத்தில் எம்மொழியையும் கற்கலாம். தேவை கருதி, விருப்பம் இருந்தால் அது சமஸ்கிருதமாக இருக்கலாம், இந்தியாக இருக்கலாம், உருது மொழியாக இருக்கலாம், தெலுங்காக இருக்கலாம், மலையாளமாக இருக்கலாம். ஆனால் கட்டாயமாக இதை படித்தாக வேண்டும். இது தேசிய மொழி என்று சொல்வதைஏற்க முடியாது.

உன் மொழி தேசிய மொழி என்றால், என் மொழி என்னவாயிற்று? பல மொழிகளின், தேசிய இனங்களின் கூடாரம். தேசிய இனங்கள் சேர்ந்து வாழ்கிற கூட்டமைப்புதான் இந்தியா. அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பே நாங்கள் இங்கு நிலைத்து வாழ்கிறோம். இன்று நாமும் கூடி வாழ்கிறோம். நீ இந்திய நாட்டின் குடிமகன் என்றால், நானும் இந்திய நாட்டின் குடிமகன்தான். 

 உன்னுடைய நேஷனலிட்டி தெலுங்கு. என்னுடைய நேஷனாலிட்டி தமிழ். அவருடைய நேஷனலிட்டி மராட்டி... ஆனால் நாமெல்லாம் இந்திய குடிமகன்கள். இதில், எந்த குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகி, வட மாநிலங்களுக்கு சென்று அந்தந்த மொழியை கற்றுக் கொள்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் ராணுவத்தில் இருக்கிறார்கள்.

இந்தி படித்துவிட்டுத்தான் அவர்கள் செல்கிறார்களா? அங்கே சென்ற பிறகு தானே இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். எங்கள் மக்கள் ஈழத்தில் இருந்து பிரான்சிற்கு சென்றார்கள். அங்கே போய் பிரெஞ்சு கற்றுக் கொண்டார்கள்.தேவை என்றால் கற்றுக்கொள்ள வேண்டும். உணவு, மொழி, உடை இதெல்லாம் தேவை. நிலமும், களமும், தேவையையும் மொழியை தீர்மானிக்கும். இதில்  போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார் சீமான். 

இதையும் படிங்க: FIGHT பண்ணிட்டே இருங்க அண்ணா! STRONG- ஆ இருங்க..! சீமானுக்கு ஊக்கம் தந்த அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share