இரவில் செக்யூரிட்டி வேலை.. பகலில் ஹெராயின் விற்பனை.. கில்லாடி வடமாநில இளைஞன் கைது..!
தமிழகத்தில் போதை வியாபாரிகள் மக்களுக்குள் கலந்து உள்ளதால் அவர்களை கண்டறிவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. அப்படி செக்யூரிட்டி வேலையில் ஒளிந்து கொண்டு ஹெராயின் விற்றவரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்காலாம்..
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கஞ்சா 4.0 வரை நடந்தது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு 100% கஞ்சா பயிரிடுவதை தடுத்துள்ள மாநிலமாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் வடமாநிலங்களில் இருந்து சிலர் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைபொருள்களை கடத்தி வந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களை தனித்து அடையாளம் காண்பது பெரும் சிரமம் மிகுந்ததாக உள்ளது. அவர்கள் மக்களுள் மக்களாக கலந்து வாழ்கின்றனர். அன்றாடம் பணிக்கு செல்வது போல சென்று, மக்களுடனே புழக்கத்தில் உள்ளனர். அதனால் அவர்களை வேறுபடுத்தி பார்த்து கைது செய்ய போலீசார் சிரமம் அடைகின்றனனர். இவ்வாறாக சென்னையில் இரவில் செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே பகல் வேலையில் ஹேராயின் போன்ற உயர் ரக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை சென்னை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம், பரங்கிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹெராயின் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக பரங்கிமலை காவல் துனை ஆனையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் அகஸ்டின் தலைமையிலான போலீசார், மீனம்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த பகுதியில் போதையில் வந்த பழைய கஞ்சா வியாபாரியான குற்றவாளி ஒருவனைப் பிடித்து விசாரித்தபோது அவர் ஹெராயின் உட்கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவரிடம் நீ எங்கிருந்து ஹேராயின் வாங்கினாய்? என்று தனிபடை போலீசார் விசாரித்தனர்.
இதையும் படிங்க: மாணவி கர்ப்பம், வேறு பெண்ணுடன் திருமணம்.. புதுமாப்பிள்ளை பேராசிரியரின் காமலீலைகள் அம்பலம்..!
அப்போது அந்த நபர் தேனாம்பேட்டையில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் முபாரக் அலி என்பவர் மூலம் ஹெராயின் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனிப்படை போலீசார் தேனாம்பேட்டை சென்றனர். அவர் சொன்ன முகவரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்த முபாரக் அலியை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பெயரில் எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி ஹெராயின் போதை பொருளை விற்று வந்த மன்சூர் இஸ்லாம் என்பவரை கைது செய்தனர்.
இதை அடுத்து அவர்களிடமிருந்து 25 கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் தனிப்படை போலீசார் 2 பேரையும் பரங்கிமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் ரயில் மூலம் அசாமில் இருந்து ஹெராயின் போதை பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து ஐ.டி ஊழியர்கள் கட்டிட தொழிலாளிகள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன் பின்னர் இருவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போதையில் தவறாக பேசிய அப்பா.. கத்தியால் குத்திக்கொன்ற மகன்.. சென்னையில் பரபரப்பு..!