×
 

மாணவி கர்ப்பம், வேறு பெண்ணுடன் திருமணம்.. புதுமாப்பிள்ளை பேராசிரியரின் காமலீலைகள் அம்பலம்..!

சென்னை வண்டலூர் அருகே கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி, சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய வைத்த கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.  இங்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 45) என்பவர் உதவி பேராசியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த கல்லூரியில் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மாதம் 3ம் தேதி அவருக்கு திருமணமும் ஆகியுள்ளது.

இந்த நிலையில் கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு தான் பணிபுரியும் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவியை கருகலைப்பு செய்திட ராஜேஷ்குமார் அழைத்து சென்று அனுமதித்து உள்ளார். அங்கு கருகலைப்பின்போது மாணவிக்கு அதீக ரத்தபோக்கு ஏற்பட்டு உள்ளது. மாணவியின் உயிருக்கே ஆபத்து ஆனதால், அந்த மருத்துவமனை சார்பில் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், அந்த மாணவியை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் சென்னையில் வசித்து வருகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

அவர் மீது திருமண மோசடி உள்ளிட்ட  3 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை கருக்கலைப்பிற்கு அழைத்து வந்த கல்லூரி பேராசிரியர் ராஜேஷ்குமார் மீது பி.என்.எஸ். 68, 82 (2), 89 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: போதையில் தவறாக பேசிய அப்பா.. கத்தியால் குத்திக்கொன்ற மகன்.. சென்னையில் பரபரப்பு..!

பி.எட், எம்.எட், எம்.பில் மற்றும் பி.எச்.டி என அதிகம் படித்த உதவி பேராசிரியர் ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை கற்பமாக்கி, அதனை மூடி மறைத்து, வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற போது மாணவியின் உயிருக்கு ஆபத்தானதால், சிக்கி சிறை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.

மேலும் படூரில் உள்ள தனியார் மருத்துவமனை எப்படி மாணவிக்கு கருகலைப்புக்கு செய்ய முன்வந்துள்ளது என்றும் கேள்வி எழுந்து உள்ளது. அதன் காரணமாக அந்த மருத்துவமனையில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தாழம்பூர் போலீசார் தபால் அனுப்பியுள்ளனர். 

இதனால் அந்த விசாரணை வளையத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர் விசாரிக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் ராஜேஷ்குமார் பணி செய்யும் அந்த தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருமணம் நடந்த அடுத்த மாதமே மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில் ராஜேஷ்குமார் கைது செய்யப்பட்டதால் புதுமனைவி அதிர்ச்சியில் உடைந்து போயுள்ளார்.

கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு, பின்னர் அவரை கழட்டி விட்டு, ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்ட பேராசிரியர் கருக்கலைப்பு வழக்கில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஹவுஸ் ஓனருக்கு விபூதி அடித்த கும்பல்.. பாத்ரூம் கழுவும் சாக்கில் நகைகள் அபேஸ்.. திரிபுரா திருடர்களை தூக்கிய போலீஸ்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share