பாரில் பவுன்சருடன் மோதல்.. காரை ஏற்றி கொல்ல முயற்சி.. போதையில் ஸ்கெட்ச் மாறியதால் சிக்கல்..!
புதுச்சேரி அருகே பாரில் மது போதையில் பவுன்சர்களுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் பவுன்சரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி அண்ணா சாலையில் இயங்கும் பிரபலமான பப்பில் கடந்த 14ஆம் தேதி வெளி மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு மது போதை அதிகமாகவே தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவன்சர்கள் அந்த கும்பலை எச்சரித்து வெளியே அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பவுன்சர்களை அடிப்பதற்காக பப்பின் வெளியே காத்திருந்துள்ளனர். அப்போது அதே நிறுவனத்திற்கு சொந்தமான வேறு பப்பில் வேலை செய்யும் வினோபா நகரை சேர்ந்த வசந்த் என்ற பவுன்சர், உணவு கொடுப்பதற்காக வந்துள்ளார்.
உணவு கொடுத்துவிட்டு அவர் தனது பைக்கில் எதிரே உள்ள பெருமாள் கோவில் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் காத்திருந்த கும்பல் அவர் அணிந்திருந்த நிறுவனத்தின் டி-ஷர்ட்டை கண்டதும், இன்னோவா காரில் அதிவேகமாக சென்று பைக்கின் பின்னால் இடித்து தள்ளியது.
இதில் நிலை தடுமாறி வசந்த் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அந்த கும்பல் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சக பவுன்சர்கள் வசந்த்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தொடரும் அச்சுறுத்தல்.. முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஹை அலர்ட்டில் போலீசார்..!
இது தொடர்பாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்தவர் வசந்தராமன் (வயது22). இவர் மிஷன் வீதியில் உள்ள ஒரு ரெஸ்டோ பாரில் பவுண்சராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ரெஸ்டோ பாருக்கு கடந்த 14-ந் தேதி அன்று கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டார்வின் (29), சிபின் (32) சென்னை ராமாபுரம் சுதாதகர் (35), ராஜஸ்தானை சேர்ந்த அபிஷேக், ராகுல் ஆகியோர் வந்தனர். அவர்கள் 5 பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வெஸ்டோபருக்கு வந்தவர்கள் செல்போன் சார்ஜ் செய்வதில் ஸ்டார்வின் தரப்பினருக்கும், அங்கு பணிபுரியும் பவுண்சர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின் ஸ்டார்வின் தரப்பினரை சமாதானம் செய்து பவுண்சர்கள் அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத ஸ்டார்வின் தரப்பினர் அவர்கள் வந்த காரில் பாருக்கு வெளியே காத்திருந்தனர். அப்போது மற்றொரு பாரில் இருந்து உணவு கொடுப்பதற்காக அதே நிறுவனத்தைச் சேர்ந்த டி-ஷர்ட் அணிந்து கொண்டு ரெஸ்டோ பாருக்கு வந்த வசந்தராமன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை காரில் ஏற்றி கொலை செய்யும் நோக்கில் விரட்டிச்சென்றனர்.
அப்போது புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் வசந்தராமன் மோட்டார் சைக்கிள் மீது காரைவிட்டு மோதினர். இதில் விபத்தில் வசந்தராமன் படுகாயமடைந்தார். பின்னர் காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி ஆதாரங்களை வைத்து தலைமறைவானவர்களை தேடி வந்தனர். மேலும் தகராறில் ஈடுபட்ட பவுன்சரை விட்டு விட்டு மற்றொரு பவுன்சரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த விவகாரம் தெரிய வந்தது.
இந்தநிலையில் ஸ்டார்வின், சிபின், சுதாகர் ஆகியோரை பெரிய கடை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் செங்கல்பட்டு பகுதியில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலை முயற்சிக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அபிஷேக், ராகுல் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரியகடை குற்றப்பிரிவு போலீசாரை கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் பாராட்டினார்.
இதையும் படிங்க: ஞானசேகரனின் தம்பியும் குற்றவாளி தான்.. திருட்டு வழக்கில் கைது.. புதுவை போலீசாருக்கு குவியும் பாராட்டு..!