×
 

ஞானசேகரனின் தம்பியும் குற்றவாளி தான்.. திருட்டு வழக்கில் கைது.. புதுவை போலீசாருக்கு குவியும் பாராட்டு..!

சென்னை அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதாகி உள்ள ஞானசேகரனின் தம்பியை நகை மோசடி வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முதலியார் பேட்டை கடலூர் மெயின் ரோடு அசோக் பேங்க் என்ற பெயரில் நகை அடகு கடை வைத்திருப்பவர் அசோக் குமார் (வயது 45). இவரது தந்தை பெயர் சாந்தி லால். ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் தனது நகை அடகு கடையில் ஊழியர் ராமு என்பவர் இருந்தபோது முதலியார் பேட்டை சேர்ந்த கார்த்திக் என்ற போலியான பெயர் முகவரி விபரம் கொடுத்து ஒரு நபர் 2 பவுன் எடையுள்ள போலி நகையை தங்க நகை எனக் கூறி அடமானம் வைத்து ரூபாய் 85 ஆயிரம் மோசடியாக பெற்று சென்று விட்டதாக அசோக் குமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த முதலியார் பேட்டை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.

ஆய்வாளர் கண்ணன், ஆய்வாளர் அலாவுதீன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைத்து விசாரணை தீவிரபடுத்தப்பட்டது. இந்த விசாரணையில், சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, மோசடி செய்த நபர், சென்னையை சேர்ந்த சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரின் தம்பி சுரேஷ் என்று அடையாளம் கண்டுபிடிக்கபப்ட்டது.

சிறப்புப்படை அவரை நள்ளிரவு 12:15 மணிக்கு அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாணையில்,  அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் இந்த வழக்கில் பிரசாந்த் முஹம்மது ஷேக் ஆகிய இருவரையும் குற்றத்துக்கு பயன்படுத்திய வேகன் ஆர் காரையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன்.. விடுவிக்க கோரி மனுதாக்கல்..!

இந்த வழக்கு விசாரணையில் மோசடி பணம் ரூபாய் 1,20,000/-பணம்,  போலி நகை தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களையும், குற்றம் செய்ய பயன்படுத்திய 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் உட்பட மொத்தம் 5.5 லட்சம் ரூபாய் புள்ள உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே நபர்கள் சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணியளவில் வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மாவதி பைனான்ஸ் என்ற நகை அடகு கடை வில்லியனுர் பகுதியில் இதே போல ரெண்டு பவுன் எடையுள்ள போலியான தங்க நகையை அடமானம் வைத்து 87 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

வில்லியனூர் காவல் நிலையம் Cr.No.92/2025. மேற்படி நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு பதிவு செய்து 24 மணி நேரத்துக்குள்ளாக சென்னையில் பதுங்கி இருந்த அடையாளம் தெரியாத குற்றவாளிகளை விசாரித்து, கண்டறிந்து கைது செய்து மோசடி பணத்தையும் பறிமுதல் செய்த முதலியார் பேட்டை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு காவலர்களை முதன்மை காவல் கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கு, மற்றும் காவல் கண்காணிப்பாளர் தெற்கு ஆகியோர்கள் பாராட்டினார்கள். 

இதையும் படிங்க: ஞானசேகரன் மீது வேறு என்னென்ன வழக்குகள்..? விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share