பெட்ரோல் கேட்டா தர மாட்டியா? ஊழியர்களை தாக்கிய போதை கும்பல்.. கைது செய்த போலீஸ்..!
பொள்ளாச்சியில் பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் தரமறுத்த ஊழியர்களை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் ஜியோ பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு கடந்த ரம்ஜான் பண்டிகை அன்று நள்ளிரவு காரில் 6 பேர் வந்துள்ளனர். காருக்கு பெட்ரோல் போடவேண்டுமா என கேட்டபோது, இல்லை கேனில் தனியாக் பெட்ரோல் வேண்டும் என கேட்டுள்ளனர்.
வந்த அனைவரும் மதுபோதையில் இருந்ததை ஊழியர்கள் தெரிந்து கொண்டனர். அதனால் அந்த இளைஞர்களை தவிர்க்க நினைத்தனர். ஆனால் மீண்டும் அந்த 6 வாலிபர்கள் கேனில் பெட்ரோல் தர வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது ஊழியர்கள் கேனில் பெட்ரோல் தர இயலாது. இது காவல் துறை உத்தவு எனக் கூறி மருத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாட்டர் கேனில் பெட்ரோல் கொடுத்தே ஆக வேண்டும் என அந்த வாலிபர்கள் சண்டை பிடித்துள்ளனர். தர முடியாது. போலீஸ் உத்தரவு என ஊழியர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, காரில் இருந்த நபர்கள் காரை விட்டு கீழே இறங்கி, பெட்ரோல் பங்க் வளாகத்தில் சிகரெட் பிடித்து உள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஊழியர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். இது பெட்ரோல் பங்க். எளிதில் தீப்பற்றி விடும். சிறு தீப்பொறி பட்டால் கூட பெரிய சேதம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: மூதாட்டியிடம் செயின் பறிப்பு.. விபத்தில் சிக்கிய திருடர்கள்.. மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!
குறிப்பாக ஆச்சிபட்டியைச் சேர்ந்த சம்பத்குமார் மற்றும் குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் இருவரும், போதை வாலிபர்களை சிகரெட் பிடிக்க கூடாது என கூறியுள்ளனர். இதனால் மது போதையில் இருந்த வாலிபர்கள் ஆத்திரமடைந்தனர். ஆரம்பத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் அதன் பின், அங்கிருந்த இரும்பு கம்பி மற்றும் மம்மட்டியை எடுத்து ஊழியர்களை தாக்கி உள்ளனர். ஊழியர்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த நிலையில், போதை தலைக்கேறிய அந்த வாலிபர்கள், ஊழியர்களை துரத்தி, துரத்தி சராமரியாக தாக்கி உள்ளனர்.
அதன் பின் அங்கிருந்து அந்த வாலிபர்கள் காரில் தப்பித்து சென்று விட்டனர். படுகாயம் அடைந்த ஊழியர்கள் இருவரையும் அங்கிருந்த சக ஊழியர்கள் மீட்டு பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாலுகா காவல் நிலைய போலீசார் காரில் வந்த நபர்கள் தேடி வந்தனர். அவர்கள் வந்த காரின் எண்ணை குறித்துக் கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த வாலிபர்கள் கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் காரின் எண்ணை வைத்து, காரை ஒட்டி வந்த அசில் (வயது 24) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் முகமது ஹாருகான் (வயது 23)அப்துல் ஹப்பர் (வயது 24) பிராங்ளின் ஜோஸ்பா (வயது 24) நதீம் பாட்ஷா (வயது 21) முகமது ஜாபர் (வயது 23) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர். நள்ளிரவில் மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை சராமரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இதை சாப்பிட்டா என்ன ஆகுறது..? புழுக்களுடன் பிரியாணி பொட்டலங்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!