இதை சாப்பிட்டா என்ன ஆகுறது..? புழுக்களுடன் பிரியாணி பொட்டலங்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!
கோவையில் ஆன்லைன் மூலம் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு புழுக்கள் நெளிந்தவாறு சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக உணவு விடுதிகளின் தரம் குறித்து அதிகளவில் புகார்கள் வெளிவர துவங்கி உள்ளன. குறிப்பாக அசைவ உணவகங்களில் சுத்தம் குறித்தும், உணவின் தரம் குறித்தும் எழும் பிரச்னைகள் அதிகளவில் கவனம் பெருகின்றன. அசைவ உணவுகளில் புழுக்கள் நெழிவது, கெட்டுப்போன வாசம் வீசுவது, அழுகிய பொருட்களை உபயோகப்படுத்துவது போன்றவை பிரதான புகார்களாக எழுந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவையில் ஆன்லைன் மூலம் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு, மட்டனுக்கு பதிலான சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதிலும் பொட்டலம் முழுக்க புழுக்கள் நெழிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்தே போனார்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் - விமலா தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில் மகள் ஒருவர் உள்ளார். நேற்று இரவு சிறுமிக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. பெற்றோரை நச்சரித்துள்ளார். மகள் ஆசையாக கேட்டதால், இரவு சோமேட்டோ உணவு விநியோக செயலி மூலம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஷெரீப் பாய் பிரியாணிக் கடையில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தார் ரத்தினம். 45 நிமிட காத்திருப்புக்கு பின் உணவு வீடு வந்து சேர்ந்தது. பிரியாணி வந்ததும் ஆசை ஆசையாய் மகள் திறந்து பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: மருதமலையில் நாளை கும்பாபிஷேகம்.. இன்று வேல் மாயம்.. பக்தர் வேடத்தில் வந்த திருடன்..!
அப்போது, அதில் மட்டனுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி இருந்தது. அதிலும் புழுக்கள் நெளிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பெற்றோர். உடனே மகளின் கையில் இருந்து பிரியாணியை பிடுங்கி உள்ளனர். இதை மகள் சாப்பிட்டு இருந்தால் என்ன ஆவது என அவர்கள் பயத்தில் ஆழ்ந்தனர். வேறு எத்தனை பேர் இதனை அறியாமல் சாப்பிட்டார்களோ என கலக்கம் அடைந்த்னர். உடனே கடைக்கு நேரில் சென்று விசாரிக்க திட்டமிட்டனர். அதன்படி உடனடியாக, அவர்கள் சரவணம்பட்டியில் இருக்கும் ஷெரீப் பாய் பிரியாணிக் கடைக்குச் நேரில் சென்று முறையிட்டனர்.
ஆனால், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், எங்களுக்கு தமிழ் தெரியாது, நாங்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி உள்ளனர். உடனே ரத்தினம் விமலா தம்ப்தியினர் கடைக்குள் நுழைந்து ஆய்வு செய்துள்ளனர். அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் ஒன்றை திறந்து பார்த்த போது, அதில் மேலும் சில பிரியாணி பொட்டலங்கள் இருந்ததும் அதில் புழுக்கள் நெழிந்து கொண்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மனம் உடைந்த வாடிக்கையாளர் ரத்தினம் உணவு பாதுகாப்புத் துறைக்கும், காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தனர். ஆனால், புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். ஒருவேளை என் மகள் அந்த உணவை சாப்பிட்டு இருந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அச்சத்துடன் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.
சென்னையில் ஷவர்மா சிக்கன் சாப்பிட்ட 18 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோவையில் நடந்த இந்த சம்பவம், உணவு பாதுகாப்பு மற்றும் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் பாஜ கொடி எரிப்பு.. திமுக சொல்லிதான் செஞ்சேன்.. வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்..!