×
 

9ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்.. சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு வலை..!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு   பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை மருத்துவர்கள் விசாரித்து உள்ளனர். அப்போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து உள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 22) என்பவரும் காதலித்து உள்ளனர். கோபால கிருஷ்ணன் மாணவியை திருமணம் செய்து முடிவு செய்து உள்ளார். 

இதுகுறித்து கோபால கிருஷ்ணன் இருவரின் வீட்டாரிடமும் பேசி உள்ளார். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்து உள்ளனர். ஒருவர் கூட பெண்ணுக்கு 18 வயது கூட நிரம்பவில்லையே என யோசிக்கவில்லை. இதை அடுத்து 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் அங்கு அவர்களின் வீட்டின் அருகே உள்ள கோயிலில் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு கோபால கிருஷ்ணன் வீட்டில் அந்த மாணவி வசித்து வந்து உள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கழுத்தில் தாலியுடன் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வருவது அங்குள்ள ஆசிரியர்கள் யாரும் கவனிக்கவில்லை போலும். அந்த மாணவியின் உடன் படிக்கும் மாணவிகளும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்து உள்ளனர்.

இதையும் படிங்க: ஜிம்கள் டார்கெட்.. ஒரு ஊசிதான்.. அர்னால்ட் ஆகலாம்! ஊக்கமருந்து கடத்திய 2 பேர் கைது..!

இதற்கு இடையே 9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகி உள்ளார். கர்ப்பம் காரணமாக அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். வீட்டிலேயே அவர் பிரசவத்திற்கு தயாராகி வந்து உள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு பேறுகால வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து, அவர்களது பெற்றோர் மாணவியை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு அவருக்கு பிரசவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

சிறுமி திருமணம் செய்தது பள்ளி நிர்வாகத்துக்கு எப்படி தெரியாமல் போனது? கர்ப்பம் அடைந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அவரின் வயதை எப்படி, டாக்டர்கள் கவனிக்காமல் விட்டனர் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். 9 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதே ஆன சிறுமிக்கு திருமணம் நடந்தது மட்டுமல்லாமல் கர்ப்பம் தரித்து பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பெண் காவலர்கள் குறித்து அவதூறு.. சவுக்கு மீது தொடரப்பட்ட 15 வழக்கு.. கோவை போலீசாருக்கு மாற்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share