×
 

கூட்டணியை உறுதி செய்த கையோடு எடப்பாடி பழனிசாமி வீட்டில் கைநனைக்கும் அமித்ஷா..!

சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் அமித்ஷாவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக-அதிமுக கூட்டணி தமிழக அரசியலில் பலமுறை உருவாகி, பிரிந்து, மீண்டும்  தற்போது கூட்டணியில் இணைந்துள்ளது. 

1998 தேர்தலில் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தில் 39 இடங்களில் 30 இடங்களை வென்றது. ஆனால், 1999-ல் ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றதால், வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

2004 தேர்தலில் மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி அமைந்தது, ஆனால் ஒரு இடம்கூட வெல்லவில்லை. 2019 மற்றும் 2021: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி வைத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டும் வென்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களைப் பெற்று, ஆட்சியை திமுகவிடம் இழந்தது.

இதையும் படிங்க: தமிழகத்தை, தமிழ்மொழியை கௌரவமாகக் கருதுகிறோம்... அடித்துச் சொல்லும் அமித் ஷா..!

2023-ல்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துகள், குறிப்பாக அண்ணாதுரை, ஜெயலலிதா பற்றிய பேச்சுகள், அதிமுகவை கோபப்படுத்தின. இதனால், செப்டம்பர் 2023-ல் அதிமுக, பாஜக-வுடனான கூட்டணியை முறித்தது.

2024 மக்களவைத் தேர்தலில், அதிமுகவும் பாஜக-வும் தனித்தனியாகப் போட்டியிட்டு, ஒரு இடத்தையும் வெல்லவில்லை. திமுக கூட்டணி 39 இடங்களையும் தட்டிச் சென்றது. இந்தத் தோல்வி, இரு கட்சிகளையும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் கூட்டணி பற்றி சிந்திக்க வைத்தது

கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். இது கூட்டணி குறித்த ஊகங்களைக் கிளப்பியது. அதிமுகவின் ஒரு பிரிவு, அண்ணாமலையின் ஆக்ரோஷமான பேச்சு, பாஜக தமிழகத்தில் தனியாக வளர வேண்டும் என்ற முயற்சியை விரும்பவில்லை. கூட்டணிக்காக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். 

திமுக-வை எதிர்க்க, வாக்கு பிளவு தவிர்க்கப்பட வேண்டும் என்பதால், அண்ணாமலையை நீக்கிவிட்டு தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக-அதிமுக கூட்டணியை இன்று உறுதி செய்துள்ளனர். அதிமுக தலைமையில் கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேர்தலை சந்திப்போம் என அறிவித்துள்ளார் அமித் ஷா. 

அதிமுக - பாஜக கூட்டணி என்பது இயல்பானது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலும் தேசிய அளவில் மோடி அளவிலும் கூட்டணி இருக்கும். 

ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் . டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப திமுக மும்மொழி கொள்கை குறித்து பேசி வருகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் விவகாரத்தை திமுக பயன்படுத்துகிறது. 
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்'' என தெரிவித்துள்ளார் அமித் ஷா.

 

இந்நிலையில் கூட்டணியை உறுதி செய்த கையோடு, சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் அமித்ஷாவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அங்கு இரவு விருந்தில் கலந்து கொள்கிறார் அமித் ஷா.
 

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு என்ன பதவி தெரியுமா..? அறிவித்தார் அமித் ஷா... பாஜக அசத்தல் ப்ளான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share