×
 

ஹவுஸ் ஓனருக்கு விபூதி அடித்த கும்பல்.. பாத்ரூம் கழுவும் சாக்கில் நகைகள் அபேஸ்.. திரிபுரா திருடர்களை தூக்கிய போலீஸ்..

சென்னை திருவான்மியூரில் பாத்ரூம் கழுவுவது போல் நடித்து 30 சவரன் நகைகளை திருடி திரிபுரா தப்பிச்சென்ற திருடர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சிவசங்கரி - பிரசாத் தம்பதி. இவர்கள் அதேபகுதியில் சிவசங்கரியின் மாமியார் உடன் மூன்று பேரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.  சிவசங்கரி  தனது வீட்டில் உள்ள பாத்ரூம் சரி செய்வதற்காக நீண்ட நாட்களாக ஆட்களை தேடி வந்துள்ளார்.

இந்த நிலையில் சிவசங்கரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பாத்ரூம் சுத்தம் செய்யும் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் தனக்கு பிடித்த மாதிரி வேலைகள் செய்து முடிப்பது போன்ற பழைய பதிவுகளையும் பார்த்த சிவசங்கரி, அதன் பிறகு அந்த  நிறுவனத்தில்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டில் வேலை செய்ய வேண்டும் என கேட்டு பதிவு செய்துள்ளார்.

அந்த தனியார் நிறுவனத்தில் இருந்து மதியத்திற்கு மேல் ஆட்கள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சிவசங்கரி அவரது கணவர் பிரசாத் ஆகிய இருவரும் வேலைக்காக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். வயதான சிவசங்கரியின் மாமியாரை பார்த்துக் கொள்வதற்காக கேர் டேக் கேர் என்கிற தனியார் நிறுவன பெண் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் வயதான சிவசங்கரியின் மாமியார் மற்றும் அவரை பார்த்துக் கொள்ள கேர் டேக் கேர் நிறுவன பெண் ஆகிய இருவரும் இருந்துள்ளனர். மதிய நேரத்தில் பாத்ரூம் சுத்தம் செய்வதற்காக தனியார் நிறுவனம் மூலம் இரண்டு நபர்கள் வீட்டிற்கு வந்து வீட்டில் வேலை செய்ய வேண்டும் என தெரிவித்து வேலையை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: மாயமான 922 கிலோ வெள்ளி கட்டிகள்.. கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது.. ஹை அலர்ட்டில் அதானி துறைமுகம்..!

வேலையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் ஆசிட்டை வீட்டிற்குள் ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். அப்போது ஆசிட்டின் நெடி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த முதியவர் சிவசங்கரியின் மாமியாரை வெளியே காத்திருக்கும் படியும் அவர் கூட இருந்த பெண்ணையும் வெளியே இருக்கும் படியும் தெரிவித்துள்ளனர். இரண்டு பேரும் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில் வீட்டின் கதவு அருகே மாட்டப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவினை திறந்து 30 சவரன் தங்க நகைகளை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு பிறகு வீட்டில் பாத்ரூம் சுத்தம் செய்யும் வேலை மற்றும் வீடு சுத்தம் செய்யும் வேலை முடிவடைந்தது என கூறிவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர். 

அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிவசங்கரி மற்றும் அவரது கணவர் பிரசாந்த் ஆகிய இருவரும் வீட்டின் நடைபெற்ற வேலையை சுற்றி பார்த்துள்ளனர். வீட்டில் ஏதோ மாற்றம் தெரிகிறது என சந்தேகம் அடைந்த சிவசங்கரி, வீட்டின் பீரோ கதவை திறந்து பார்த்துள்ளார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகைகள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வீட்டில் வேலை செய்த கேர் டேக்கர் நிறுவன பெண்ணிடம் விசாரித்த பொழுது வீட்டில் வேலை செய்யும் பொழுது ஆசிட்டின் நெறி தாங்க முடியாமல் இருவரும் வெளியே வந்து காத்திருந்தது குறித்து கூறியுள்ளார். 

இதனை அடுத்து வீட்டில் வேலை செய்ய வந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உணர்ந்து குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு வேலை செய்யவந்த ஆட்கள் செய்ய வந்த ஆட்கள் குறித்து அவர்களுடைய விவரங்கள் கேட்டறிந்து அவற்றை கொண்டு சென்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் சிவசங்கரி புகார் அளித்தார்.புகாரின் பேரில் திருவான்மியூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பின்பு வீட்டிற்கு வேலைக்கு வந்த இரண்டு நபர்கள் அவர்களுடைய செல்போன் எங்களுக்கு தொடர்பு கொண்ட பொழுது அவை ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

பிறகு சிவசங்கரியின் வீட்டில் இருந்து அந்த நபர்கள் எப்பொழுது வேலைக்கு வந்தார்கள் எவ்வளவு நேரம் வேலை செய்தார்கள் எந்த வழியாக வந்தார்கள் போன்றவற்றை சிசிடிவி கேமரா காட்சி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். பிறகு விசாரணையில் அவர்கள் இருவரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த  மேற்கு திரிபுரா பகுதியை சேர்ந்த பிடன் மியா (வயது 32) லிடன் மியா (வயது 28) ஆகிய இரண்டு நபர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வரவே அவர்களுடைய முகவரி குறித்தும் விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். இதனை அடுத்து 30 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்ற நபர்களை பிடிப்பதற்கு தனி படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகிய நபர்களின் புகைப்படமும் அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் பதிவாகிய புகைப்படமும் தொடர்பு படுத்தி விசாரணை மேற்கொண்டு கிடைத்த தகவலின் அடிப்படையில்  திருவான்மியூர் காவல் நிலைய போலீசார் அவர்கள் திரிபுரா மாநிலத்திற்கு தப்பி சென்றதை உறுதி செய்தனர். திருவான்மியூர் காவல் நிலையம் போலீசார் திரிபுரா மாநிலத்திற்கு குற்றவாளிகளை பிடிப்பதற்காக விரைந்து சென்று குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் டவர் லொகேஷன் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் இருவரையும் திரிபுரா மாநிலத்தில் செபாஹிஜலா மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடமும் திருடிய முப்பது சவரன் நகை குறித்து விசாரணை செய்த பொழுது இரண்டு நபர்களும் நபர்   அதனை தங்களுடைய மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள நகை அடகு கடைக்கு ஒன்றில் 30 சவரன் நகையை வெறும் 12 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை சரிசமமாக பிரித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். திருவான்மியூர் காவல் நிலைய தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். விற்கப்பட்ட நகைகள் அடுத்தடுத்து விசாரணையில் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மேலும் இவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தெரியவரும் என திருவான்மியூர் காவல் நிலைய போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மக்களே உஷார்..! பூட்டிய வீட்டில் நகை திருட்டு.. வாசலில் இருந்த சாவியால் திருடன் ஹாப்பி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share