×
 

பொய் சொன்னதுக்கு இப்படியா? பாஸ் ஆனதாக பொய் சொன்ன மகள்.. கத்தியால் குத்திக் கொன்ற தாய்..!

தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக, பொய் சொன்னதால் மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது

ஆந்திராவை சேர்ந்தவர் பீமானேனி மகேஸ்வர் ராவ். இவரது மனைவி பத்மினி ராணி (வயது 59). இந்த தம்பதியின் மகள் சாகிதி சிவபிரியா (வயது 17). இவர்கள் மூன்று பேரும் பெங்களூரு பனசங்கரி சாஸ்திரி நகரில் வசித்தனர். திருமணமாகி 16 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை என்பதால் பெற்றோர் மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்துள்ளனர்.  

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பீமானேனி மகேஸ்வர் ராவ் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். அதன் பின் தாய்க்கு மகளும், மகளுக்கு தாயுமாக ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்துள்ளனர். ஆனாலும் அந்த நேரத்தில் அம்மாவுக்கு உதவியாக இல்லாமல் சாகிதி தான்தோன்றி தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

கணவரின் குடும்பத்திற்குச் சொந்தமான கட்டிடத்திலிருந்து வாடகை வருமானத்தை நம்பியிருந்ததால் மகள் நன்றாக படித்ததும் நல்ல நிலைமைக்கு சென்று விடுவோம் என நம்பி உள்ளார் பத்மினி. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பி.யு.சி தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தான் 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக சாகிதி சிவபிரியா தனது தாயிடம் கூறி உள்ளார். மகள் நல்லபடியாக பாஸ் செய்துவிட்டாள் என ஊரில் உள்ள உற்றார், உறவினர் சொந்த பந்தங்கள் என அனைவருக்கும் போன் போட்டு சொல்லி உள்ளார் பத்மினி.

இதையும் படிங்க: குனியமுத்தூரில் பயங்கரம்.. வாலிபர் கத்தியால் குத்திக்கொலை.. முன்விரோதத்தால் வெறிச்செயல்..!

மகளின் மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளோம். அங்கு என் மகள் படித்து நல்ல நிலைக்கு வந்து விடுவோம் என பார்ப்போர் இடமெல்லாம் சொல்லி மகிழ்ந்துள்ளார். ஆனால் மகள் அமெரிக்கா பல்கலை கழகத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டாமலே இருந்துள்ளார். அப்ளிகேஷம் போடவும் விருப்பம் காட்டவில்லை. ஏன் என பத்மினி அதட்டி விசாரித்த போது, தான் ஒரு பாடத்தில் பெயில் ஆகி விட்டதாக மகள் கூலாக சொல்லி இருக்கிறாள். உன்னை பார்த்துக் கொள்வதே பெரிய வேலையாக இருக்கிறது. இதனால் தான் பாஸ் ஆக முடியவில்லை என தாய் மீதே பலியை தூக்கி போட்டுள்ளார்.

மனவேதனை அடைந்த பத்மினி, மகள் சொல்லியதை முழுதாக நம்பவில்லை. தனது மகள் தன்னிடம் வேறு எதையோ மறைப்பதாக உணர்ந்து கொண்டார். இதுகுறித்து அவளுடன் படிக்கும் தோழிக்கு கால் செய்து கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் சொல்லிய செய்தி, பத்மினி காதில் இடியாக விழுந்துள்ளது. அதாவது சாகிதி சிவபிரியா ஒரு பாடத்தில் அல்ல 4 பாடத்தில் தேர்வு பெறவில்லை. பெயில் ஆகி இருக்கிறார். ஆனால் அம்மாவிடம் முதலில் 95 சதவீதம் எடுத்து தேர்வானதாகவும், அதன் பிறகு 1 பாடத்தில் மட்டும் பெயில் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த பத்மினி, மகள் சாகிதியை அழைத்து இதுகுறித்து கேட்டுள்ளார். ஊர், உறவுக்கெல்லாம் இதுபற்றி சொல்லி விட்டேன். இப்போது நீ பெயில் என தெரிந்தால் என் மானமே போகுமே. அவமானம் ஏற்படுமே என்று கண்ணீர் விட்டுள்ளார். ஆனால் சாகிதி இதுகுறித்து எல்லாம் கவலையெ இல்லாமல், ஆமாம் பெயில் ஆகிவிட்டேன். அதற்கு என்ன இப்பொது என கூலாக டீல் செய்துள்ளார்.

ஆத்திரமடைந்த பத்மினி, கிச்சனில் இருந்த கத்தியால் மகளை குத்தி கொலை செய்தார். அவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவரை அக்கம்பக்கதினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த வழக்கில் பத்மினிக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி காவலாளி குத்திக்கொலை.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. வாணியம்பாடியில் பயங்கரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share