×
 

மக்களே உஷார்..! பூட்டிய வீட்டில் நகை திருட்டு.. வாசலில் இருந்த சாவியால் திருடன் ஹாப்பி..!

சென்னை காரப்பாக்கம் அருகே வீட்டின் வாசலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாவியை சரியாக கண்டுபிடித்து எடுத்த திருடன், வீட்டில் இருந்த 20 சவரன் நகைகளை திருடி தப்பித்தது பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த  காரப்பாக்கம், பல்லவன் குடியிருப்பு, 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 33). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 7ம் தேதி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று விட்டனர். நேற்று காலை டில்லிபாபு வீட்டை பூட்டி விட்டு, சாவியை அருகில் உள்ள ஷூவில் வைத்து விட்டு வேலைக்கு சென்று உள்ளார்.

மாலை ஊருக்கு சென்ற மனைவி குழந்தையை ஊரில் இருந்து வந்துள்ளனர். வேலை முடிந்து வரும் பொழுது மனைவி, குழந்தைகளை  கண்ணகி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிக்அப் செய்த டில்லி பாபு அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

தான் வைத்த இடத்திலேயே இருந்த வீட்டின் சாவியை எடுத்து, பூட்டை சாவி போட்டு திறந்துள்ளார். வீட்டை திறந்த உடன் டேபிள் மீது நகை வைக்கும் பெட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், பீரோவில் சென்று பார்த்த போது அதில் சாவி இருந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகைகள் மாயமாகியுள்ளதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.  தகவலின் பேரில் கண்ணகி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் சம்பட இடத்திற்கு சென்றார். 

இதையும் படிங்க: போக்சோவில் சிக்கிய போதகர்.. ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு.. விரைவில் விசாரணை..!

வீட்டின் பிற பகுதிகளில் ஆய்வு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர். நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். வலைவீசி தேடி வருகின்றனர். பொதுவாக இதுபோல் வீட்டிற்கு வெளியே மறைவிடத்தில் வைக்கப்படும் சாவியை தொடர்ந்து பின் தொடரும் திருடர்கள் எளிதில் அடையாளம் கண்டு பிடித்து விடுகின்றனர்.

கொள்ளையிடும் நோக்கில் நோட்டமிடும் திருடர்களுக்கு இது எளிதில் கை கூடி விடுகிறது. இந்த நிலையில் தான் போலீசார் இதுபோல் சாவியை வைத்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துவிட்டு, அவர்களிடம் சாவியை கொடுத்துவிட்டு செல்லலாம் என்றும் கூறினர்.

இந்த நிலையில் போதிய போலீசார் இல்லததாலும் திருடர்களை பிடிப்பதில் சிரமம் இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர்கள், உதவி ஆணையர்களாக பதவி உயர்வு பெற்று பல மாதங்களாகியும், பல காவல் நிலையங்கள் குறிப்பாக செம்மஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கண்ணகி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமாரை செம்மஞ்சேரி பொறுப்பு ஆய்வாளராக நியமித்துள்ளதால் கண்ணகி நகரை அவர் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர். இந்த நிலையில் இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே காவல் ஆய்வாளர்கள் இல்லாத காவல் நிலையங்களில் ஆய்வாளர்களை நியமிக்க கோரிக்கை எழுகிறது.

இதையும் படிங்க: மிதமிஞ்சிய மது போதை.. காருக்குள்ளே சமாதியான உடல்.. ஏசி போட்டு காரில் தூங்கியவர் கதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share