பச்சிளம் பெண் குழந்தை விற்பனை.. பேரம்பேசி முடித்துக் கொடுத்த டாக்டர்.. சிதம்பரத்தில் பரபரப்பு..!
சிதம்பரம் அருகே பிறந்து 7 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர், வடலுாரில் சித்த மருத்துவராக உள்ள சத்தியா பிரியா என்பவரிடமிருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ. 1 லட்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சித்ராவதிக்கு கிடைத்த தகவலின்பேரில், நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அதை உறுதி செய்த அவர் குழந்தையை மீட்டு, கடலூர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், குழந்தை யாருக்கு பிறந்தது? அதை விற்றவர்கள் யார்? இதன் பின்னணியில் கடத்தல் விவகாரம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது; கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வடலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தகாத உறவால் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமல் மூடி மறைக்க முயன்றுள்ளார். அந்த பெண்ணிற்கு, வடலூர் புதுநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவியான 65 வயதான சித்த மருத்துவர் சத்திய பிரியா, மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இவர் அதே பகுதியில் க்ளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருடைய கிளினிக்கில் தகாத உறவால் கர்ப்பிணியான இளம் பெண்ணுக்கு சித்த மருத்துவ சத்திய பிரியா பிரசவம் பார்த்துள்ளார். அந்த இளம் பெண்ணும் பச்சிளம் பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்.
இதையும் படிங்க: அவ உத்தமி இல்ல.. நீ புஷ்பா புருஷன்டா.. தவறாக பேசிய முன்னாள் காதலன்.. ஆத்திரத்தில் வெட்டி சரித்த கணவன்..!
இந்த நிலையில் பிறந்த குழந்தையை என்ன செய்வது யோசித்த டாக்டரும், பெற்ற தாயும், குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பது என முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த குழந்தையை சிதம்பரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்பது என முடிவானது.
பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த அந்த பெண், சித்த மருத்துவர் சத்திய பிரியாவிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அந்த பச்சிளம் குழந்தையை கடந்த 13ஆம் தேதி வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது அக்கம் பக்கத்தினர் வழியாக இந்த தகவல் குறித்து கடலூர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சித்ராவதிக்கு தகவல் சென்றுள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட கடலூர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சித்ராவதி குழந்தையை மீட்டு உள்ளார். இந்த நிலையில், சிதம்பரம் தாலுக்கா போலீசார் சட்டவிரோதமாக இளம் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்தது மட்டுமல்லாமல், அந்த குழந்தையை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த சித்த மருத்துவர் சத்திய பிரியா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அந்த பச்சிளம் குழந்தையை கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிதம்பர தாலுக்கா காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லட்ச ரூபாய் பணத்திற்காக பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை விற்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்.. போதையில் ரகளை செய்த வாலிபர்கள் கைது..!