14 வயது சிறுமிக்கு திருமணம்..? வேண்டாம் என கதறி அழும் சிறுமி.. குண்டு கட்டாக தூக்கி சென்ற கணவர்..!
தேன்கனிக்கோட்டை அருகே 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்ததோடு, அச்சிறுமியை வலுக்காட்டாயமாக தூக்கி செல்வது போன்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மலை கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியின் படிப்பை நிறுத்திய நிலையில் தற்போது சிறுமி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி பருவம் அடைந்து விட்டதாக கூறி, இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை என்ற மலை கிராமத்தை சேர்ந்த, சிறுமியை விட 2 மடங்கு வயதுடைய 29 வயதாம கூலித்தொழிலாளி மாதேஷ் என்பவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயித்துள்ளனர். சிறுமி எவ்வளவு கதறி அழுதும், சிறுமியின் பேச்சை காதிலேயே வாங்காமல், கடந்த 3 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறுமிக்கு கட்டாய திருமணமும் நடந்துள்ளது.
இந்த திருமணத்திற்கு 29 வயதே ஆன, சிறுமியின் தாய் நாகம்மா உதவியாக இருந்துள்ளார். 29 வயதான நாகம்மாவுக்கு 14 வயதில் மகள் என்றால், அவருக்கும் இதேபோல் 14- 15 திருமணம் நடந்திருக்க வேண்டும். அப்போது தான் அனுபவித்த கஷ்டத்தை தானே தனது பெண்ணும் அனுபவிக்க போகிறாள் என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல், தாய் நாகம்மாள் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதனிடையே மறுவீடு என்ற நிகழ்விற்காக பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு அந்த சிறுமி திரும்பி வந்துள்ளார். தனது குடும்பத்தாரிடம் திருமணம் பிடிக்கவில்லை என்றும், இனி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றும் கூறி அழுதுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கெஞ்சி உள்ளார்.
இதையும் படிங்க: காதல் கசக்குதய்யா.. 5 நாளில் புளித்துப்போன இன்ஸ்டா காதல்.. கழட்டி விட நினைத்த ராணுவ வீரரை ரவுண்டு கட்டிய பெண் வீட்டார்..!
சிறுமி எவ்வளவு கெஞ்சு அழுதாலும் கேட்பதாய் இல்லை மாப்பிள்ளை மாதேஷ். துணைக்கு அவர் அண்ணன் மல்லேஷும் பொண்ணை தூக்கிட்டு வாடா என தோரணையில் கூறி உள்ளார். இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் ஆகியோர் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுகட்டாக துாக்கி சென்றுள்ளனர். சிறுமியை அவர்கள் தூக்கி செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் தன்னை காப்பாற்றும் படி 14 வயதே ஆன சிறுமி உடைந்து அழுவது காண்போர் அனைவரையும் கலங்க செய்தது.
இதனிடையே வீடியோ வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிறுமியின் பாட்டியிடம் புகாரை கேட்டு பெற்றனர். இளம் வயதுள்ள சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் இந்த திருமணத்திற்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் நாகம்மா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் வீடியோவில் இருந்த மற்றுமொரு பெண் யார் என விசாரித்தனர். சிறுமியின் தாய் நாகம்மாளின் அண்ணன் மனைவி முனியம்மாள் என தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் வீட்டுக்கு செல்ல மறுத்த சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சாமி கும்பிட வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... காமுகன்களை சுட்டுப்பிடித்த காவல்துறை...!