மின்சார வாகனத்தில் பற்றி எரிந்த தீ.. குழந்தை உட்பட மூவர் படுகாயம்..!
சென்னையில் சார்ஜ் போட்டு கொண்டு போட்டுக் கொண்டிருந்தபோது மின்சார இரு சக்கர வாகனம் தீ பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயல் ப குதியைச் கௌதம் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நடராஜன் பெட்ரோலில் வாகனத்தை தவிர்த்து மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.
தொடர்ந்து வழக்கம் போல் அவர் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போட்டுவிட்டு முதல் தளத்திலிருந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென சார்ஜ் போட்டு கொண்டு இருந்த வண்டியில் தீ பற்றியுள்ளது. சந்தேகத்தில் வீட்டில் இருந்து வெளிவந்து பார்த்த கௌதம் தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளார். அப்போது கௌதமின் மனைவியும் ஒன்பது மாத குழந்தையுடன் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
அப்போது தீ வேகமாக பரவியதை அடுத்து அவரது மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகிய மூவரும் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் லேசான காயங்களுடன் மனைவி தப்பிய நிலையில் 9 மாத குழந்தையும் கௌதமும் படுகாயம் அடைந்துள்ளனர். என்ன நிலையில் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: மளிகை கடையில் பயங்கர தீ விபத்து.. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!
முன்னதாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார வாகனத்தில் தீப்பிடித்த சம்பவம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: தொழிற்சாலையில் பற்றிய தீ.. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!