ஆபாச வீடியோ, புகைப்படங்கள்.... 10க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்...!
பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக ஆசிரியர் நடந்து கொண்டதாக புகார். பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 1000 ம்மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் இந்த நிலையில் கடந்த வாரம் ஆசிரியர் சுந்தர வடிவேல் என்பவர் ஏழாம் வகுப்பு பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது இனத தொடர்ந்து பள்ளி மாணவர்களின் தங்களது பெற்றோர்களிடம் புகார் அளித்தார்கள்.
இன்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வருகை புரிந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் பெற்றோர்கள் தரப்பில் பள்ளி மாணவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்ததாகவும் தொடர்ந்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதேபோல பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக பெற்றோர்கள் தரப்பில் புகார் கூறுகின்றனர்
இதையும் படிங்க: மீண்டும், மீண்டுமா?... ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... போதை ஆசாமியை தட்டித்தூக்கிய காவல்துறை...!
புகாரை அடுத்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது விசாரணை. மேற்கொண்டு வருகிறார்கள் மேலும் பள்ளியில் குழந்தைகள் பெற்றோர்கள் குவிந்து வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தொடரும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்... சிக்கினால் ஆசிரியர் வேலை காலி...அனைத்து படிப்பும் ரத்து...அரசாணை வெளியானது