×
 

எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து.. ரயில்களுக்கு சிக்னல் அனுப்புவதில் சிரமம்..!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல் மாடியில் உள்ள அலுவலக கட்டிடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கிருந்து அதிகாரிகள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், உடனடியாகவே வேப்பேரி பகுதி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு விரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அலுவலக தொழில் திடீரென தீப்பற்றியது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  முன்னதாக மின் வயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் யூகம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மின்சார வாகனத்தில் பற்றி எரிந்த தீ..  9 மாத குழந்தை பலி..!

இதனைத் தொடர்ந்து ரயில்வே அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினால் ரயில்களுக்கு சிக்னல் அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை மீண்டும் ரயில் சேவைகளை துவக்குவதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: மின்சார வாகனத்தில் பற்றி எரிந்த தீ..  குழந்தை உட்பட மூவர் படுகாயம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share