×
 

நேற்று வந்தவர் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்... முதல்வர் விஜய்யை தாக்கும் பின்னணி?

யார் யாரோ கட்சி ஆரம்பிக்கிறார்கள், உடனே முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள் என்று விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் முதல்வர், தவெகவின் வளர்ச்சி அதன் பின்னால் திரளும் இளைஞர் கூட்டம் முதல்வரை பாதித்துள்ளதா பார்ப்போம்.

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழங்கிய ஆறு மாவட்ட செயலாளர்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை திமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜீவ்காந்தி முன் நின்று நடத்தினார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சி குறித்து மறைமுகமாக பேசி விமர்சித்தார். திராவிட மாடல் என்றால் பலருக்கும் எரிகிறது என்று மறைமுகமாக சீமானை தாக்கி, சில கட்சிகளை நான் பேர் சொல்லி அழைக்க மாட்டேன் அவர்கள் பெயரை சொல்லக்கூட நான் விரும்பவில்லை பெயர் சொல்லி அவர்களை ஆளாக்க விரும்பவில்லை என்றெல்லாம் பேசினார். 
இதில் விஜய்யின் தவெகவையும் முதல்வர் விமர்சித்தார். சிலர் திடீரென கட்சியை ஆரம்பிக்கிறார்கள், நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்கின்றனர்.  கட்சி ஆரம்பித்த உடனேயே முதலமைச்சராகிற வேண்டும் நினைக்கின்றனர். நாங்கள் தான் அடுத்த ஆட்சி நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்று அனாதை நிலையில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் இன்றைக்கு பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் எந்தக்கட்சி என்றெல்லாம் நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை. வேஷம் இட்டுக்கொண்டிருப்பவர்கள், நாடகத்தை நடத்திக்கொண்டிருப்பவர்களை எல்லாம் நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை. அவர்கள் பெயரையும் சொல்லி நான் ஆளாக்க விரும்பவில்லை என்று மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசினார். 

இதையும் படிங்க: புஸ்ஸி கொஞ்சம் வெளிய நில்லுங்கள்... அதிர்ச்சி கொடுத்த விஜய்...உள்ளே என்ன நடந்தது?

இந்த விழாவில் முதல்வர் பேசும்பொழுது ஆளுநரையும், ஆளுநரின் செயல்பாடுகள் பற்றியும் பேசி அவரை மாற்றி விடாதீர்கள் அவர் இருக்கும் வரை திமுகவுக்குத்தான் லாபம் என்று பேசினார். விஜய் கட்சி ஆரம்பித்து மாவட்ட நிர்வாகிகள் நியமனம், அடுத்தடுத்த நிகழ்வுகளை நோக்கி கடந்து செல்லும் நிலையில் விஜய்யின் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு மூவ்மெண்டையும் திமுக ஜாக்கிரதையாக பார்க்கிறது. பரந்தூருக்கு விஜய் சென்றால் உடனடியாக பரந்தூர் பற்றி அறிக்கை வருகிறது. விஜய் கட்சி ஆரம்பித்த உடன் அரசியல் எதிரியாக திமுகவை சுட்டிக்காட்டியவர் ஆட்சியில் பங்கு அதிகார பகிர்வு, யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்று தெரிவித்தது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசியலில் ஒரு மாற்றமும் இல்லாத நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்ததால் இளைஞர்கள் கூட்டம் விஜய்யின் பக்கம் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் பெண்கள் பெருமளவில் விஜய்க்கு வாக்களிக்க விரும்புவார்கள் என்பதும் உளவுத்துறை மூலம் திமுகவிற்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல்களினால் எச்சரிக்கை அடைந்துள்ள திமுக தலைமை இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்து வருகின்றனர். விஜய் கூட்டணி என்று அதிமுகவுடன் சென்றால் அது தொடங்கிய உடனே திமுக கூட்டணியை முடிவுக்கு கொண்டுவரும் நிலையில் ஆட்சியிலிருந்து அகற்றவும் காரணமாக அமையும். 

விஜய்யின் வளர்ச்சி அவர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் உடனும், அதிமுகவுடனும் இணைந்தால் அது திமுகவிற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதை திமுக தலைமை உணர்ந்து இருக்கிறது. அந்த கோபத்தின் வெளிப்பாடே  இதை குறிப்பிடாமல் விஜய் கட்சியை வந்த உடனேயே முதலமைச்சராக முயற்சி எடுக்கிறார்கள், அனாதையாக திரிபவர்கள், வேஷம் கட்டுபவர், நாடகம் போடுபவர் என்று முதல்வர் தாக்கி பேசினார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அடுத்து எங்கள் ஆட்சி, நான்தான் முதல்வர் என்று பிதற்றுகிறார்கள்.. சீமான், விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் சுளீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share