×
 

கேரளாவின் தலைமறைவு குற்றவாளி.. சென்னை ஏர்போர்ட்டில் கைது.. எகிறும் கிரைம் லிஸ்ட்..!

கேரளாவில் கற்பழிப்பு, போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சென்னை ஏர்போட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரோசித் ராஜீவன் (வயது-31). இவர் மீது கற்பழிப்பு, கடத்துதல், மிரட்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் கோழிக்கோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார், ரோசித் ராஜீவனை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர்.

ஆனால் அவர் போலீசில் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அதோடு அவர் வெளி நாட்டிற்கு தப்பி சென்று விட்டார் என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்தது. 

இதை அடுத்து கோழிக்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், ரோசித் ராஜீவனை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸும் போடப்பட்டது.  இந்த நிலையில் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்து, பயணிகளை வெளியில் அனுப்பி கொண்டு இருந்தனர். 

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டு சிறை.. போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

அப்போது அந்த விமானத்தில் இரண்டு ஆண்டுகளாக, கேரள மாநிலம் கோழிக் கோடு குற்றப்பிரிவு போலீசால்,போக்சோ மற்றும் கடத்தல், கற்பழிப்பு குற்றத்தில் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி, ரோசித் ராஜீவன், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை, கம்ப்யூட்டரில் பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், இவர் இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக அவரை வெளியில் விடாமல், சுற்றி வளைத்து பிடித்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்து, அவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அறைக்கு, போலீஸ் காவலும் போடப்பட்டது. 

மேலும் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், இரண்டு ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி, மஸ்கட்டில்  இருந்து விமானத்தில் வந்த போது, சென்னை  விமான நிலையத்தில் சிக்கியுள்ளார் என்ற தகவலையும் கோழிக்கோடு போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியப்படுத்தினர். இதை அடுத்து கோழிக்கோடு மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை  போலீசார், ரோசித் ராஜீவனை கைது செய்து, கேரளா கொண்டு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து உள்ளனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த போக்சோ, கற்பழிப்பு, கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி, இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தொட்டு அளவெடுத்த டெய்லர்.. சங்கடத்தில் நெளிந்த மாணவி.. தட்டிக்கேட்காத ஆசிரியர், டெய்லர் போக்சோவில் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share