×
 

தொழிலதிபர், மனைவி கொடூர கொலை.. ஆடைகளின்றி கிடந்த சடலங்கள்.. கோட்டயத்தை குலைநடுங்கவிட்ட சம்பவம்..!

வயது முதிர்ந்த தம்பதியை நிர்வாணமாக்கி, முகம் முதல் உடல் முழுவதும் கூர்மையான ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துள்ளது மர்ம கும்பல் ஒன்று. யார் அந்த கும்பல்? எங்கே நடந்தது இந்த கொலை சம்பவம் விரிவாக பார்க்கலாம்..

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் திருவாதுக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி  மீரா. விஜய குமார் திருநக்கரா பகுதியில் பிரபல இந்திரபிரஸ்தம் திருமண மண்டபத்தை நடத்தி வருகிறார். இது தவிர அவருக்கு பல ஷாப்பிங் காப்ளக்ஸ்களும் உண்டு. அவற்றின் மூலம் வாடகை வருவாயும் வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு விஜய குமார் - மீரா வீட்டில் பணிபுரியும் பணிப்பெண், காலை வேலைக்கு வந்துள்ளார்.

வீட்டிற்குள் பொருட்கள் தவறாக இருப்பதையும், பின்புற கதவு திறந்திருப்பதையும் கண்டார். முதலாளியையும், முதலாளி அம்மாவையும் பேர் சொல்லி அழைத்துள்ளார். ஆனால் இருவருமே பதிலளிகவில்லை. ஏதோ தவறாய் நடந்திருப்ப்தை அறிந்த அந்த பெண், உடனே அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது தம்பதியினர் வெவ்வேறு அறைகளில் இறந்து கிடந்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் தனித்தனி அறைகளில் உடைகளின்றி இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் முகத்தை பலமாக தாக்கி, கொலை செய்துள்ளனர். விஜய குமார் தலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். இருவரின் உடல்களும் ஆடைகள் களையப்பட்டு இரத்த வெள்ளத்தில் காணப்பட்டன. கொலையாளி அவர்களைக் கொல்ல கோடரியைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் யானைகள் அட்டகாசம்.. பழங்குடியினர் இருவர் பலி.. விசாரணைக்கு உத்தரவு..!

கோட்டயம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷாகும் ஹமீது, இது கொலைதான் என உறுதியாக தெரிவித்தார். வீட்டில் இருந்த எந்தப் பொருளும் கொள்ளையடிக்கப்படாததால், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகித்துள்ளனர். மேலும், வீட்டை உடைத்து கொலையாளிகள் உள்ளே நுழைந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும், மேலும் அவர்களது செல்ல நாய் அமைதியாக இருந்து உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே கொலையாளி நன்கு பழக்கப்பட்ட ஒருவன் தான் என்றும் கூறினார். வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க் மட்டுமே திருடு போயுள்ளதாகவும் கூறினார்.

விஜயகுமாரின் வீட்டில் சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்த அசாமை சேர்ந்த அமித் என்ற தொழிலாளி சமீபத்தில் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். அவர் வீட்டில் சிறு சிறு திருட்டில் ஈடுபட்டதால் அவரை பணியில் இருந்து நிறுத்தியதோடு போலீசிலும் பிடித்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த அமித் இந்த கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே சமயம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, விஜயகுமாரின் மகன் கௌதமின் உடல் மாவட்டத்தில் ரயில் பாதையின் ஓரத்தில் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் விஜயகுமார் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி சிபிஐ விசாரணை கோரினார், கடந்த மாதம்தான் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. திருவனந்தபுரம் சிபிஐ பிரிவு தனது விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில் விஜயகுமார், மீரா கொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 

இதையும் படிங்க: ‘டிஜிட்டல் கல்வியறிவில்’ கேரளா மாநிலம் முதலிடம்.. இலக்கை எட்டி சாதனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share