22 வருட பகை 21 கொலைகள்.. இன்ஸ்-ஐ சுட்ட ரவுடி.. சுத்துபோட்ட போலீஸ்.. தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு என்கவுன்டர்..!
மதுரையில் இரு கொலை உட்பட 20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுபாஷ்சந்திரபோஸ் விசாரணையில் போது போலீசாரை வெட்டியதோடு இன்ஸ்பெக்டர் மீது கள்ளத்துப்பாக்கியால் சுட்டார். தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் சுட்டதில் பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவைச் சேர்ந்த வீகே. குருசாமி, ராஜபாண்டி ஆகியோர் நண்பர்கள். இருவரும் மதுரையில் குடியேறி அரசியலில் நுழைந்தது முதல் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த 20 ஆண்டு காலமாக இருதரப்பிலும் பழிக்குப் பழியாக 22 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
சமீபத்தில் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி வீ.கே.குருசாமியின் சகோதரி மகனான கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
கொலை நடந்த மறு தினமே மதுரையைச் சேர்ந்த குட்ட பாண்டி என்ற குள்ள முத்துப்பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து இந்தக் கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், நந்தகுமார், நவீன்குமார், கார்த்திக், அசன் ஆகிய 7 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ்சந்திர போஸை தனி படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் காவலர் கொடூர கொலை.. அதிரடியில் இறங்கிய போலீஸ்.. குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு..!
நேற்று மாலை 6 மணியளவில் விளாச்சேரி செக்போஸ்ட்டில் கார் ஒன்றை போலீசார் சோதனையிட நிறுத்தினர். கார் நிற்காமல் சென்றது. காரில் இருந்த சுபாஷ்சந்திர போஸை, தனிப்படை போலீசார் விரட்டிப் பிடிக்க முயன்றனர். மற்ற போலீசார் அலர்ட் செய்யப்பட்டனர். பெருங்குடி பகுதியிலும் கார் நிறுத்தாமல் ரிங் ரோட்டில் சென்றது. அப்போது அவர் தன்னிடமிருந்த வாளை எடுத்து காவல்துறையினரை நோக்கி வீசியுள்ளார்.
அதில் தலைமை காவலர்கள் இரண்டு பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சுபாஷ்சந்திர போஸ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல் ஆய்வாளரை நோக்கி சுட்டுள்ளார். இதில் நூலிழையில் தப்பிய காவல் ஆய்வாளர் பூமிநாதன் சுபாஸ்சந்திர போஸை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சுபாஷ்சந்திர போஸ் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட கமிஷனர் லோகநாதன் பார்வையிட்டார். மேலும் அவர் கூறியதாவது; வாகன சோதனையின்போது காரை நிறுத்த முயன்றபோது நிறுத்தவில்லை. பெருங்குடியிலும் நிறுத்தாததால் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் பின்தொடர்ந்து பிடிக்க முயன்றனர். அப்போது 2 போலீசாரை வெட்டியதோடு, கள்ளத்துப்பாக்கியால் இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டார்.
நல்லவேளையாக தோட்டா காரில் பட்டது. இதனால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் சுட்டதில் சுபாஷ்சந்திரபோஸ் காயமுற்றார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார் என கூறினார். இதைத் தொடர்ந்து சுபாஸ் சந்திர போஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. என்கவுன்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: சினிமா வசனம், வெட்டி பேச்சு.. திறனற்ற பொம்மை முதல்வர்.. காவலர் கொலையில் இபிஎஸ் கண்டனம்..!