×
 

பூட்டிய வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்.. ரூ.100 கோடி மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்.. துபாய் முதலீட்டாளருக்கு வலை..!

ஆமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள், தங்க நகைகள், ரொக்க பணம் என ரூ.100 கோடி மதிப்பிலான நகை, பணம் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆமதாபாத்தில் உள்ள Paldi பால்டி என்ற இடத்தில் ஒரு அபார்ட்மென்ட் உள்ளது.  அதில் ஒரு வீடு தொடர்ந்து பூட்டி இருப்பதாகவும், அங்கு சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகள் நடப்பதாகவும் குஜராத் உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் குஜராத் தீவிரவாத ஒழிப்பு பிரிவு போலீசார் ATS or Anti-Terrorism Squad அங்கு சென்றனர்.

விசாரணையில் மேககுமார் ஷா என்ற பங்கு சந்தை வியாபாரி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனை நடத்த சென்ற போதும் வீடு பூட்டப்பட்டு இருந்தது. மேககுமார் ஷாவின் உறவினர் ஒருவர் அதே அபார்ட்மென்டில் வேறு ஒரு வீட்டில் வசிப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் தன்னிடம் ஒரு ஸ்பேர் கீயை மேககுமார் ஷா கொடுத்துவிட்டு சென்று இருப்பதாக கூறினார். எனவே அவரிடம் இருந்த மற்றொரு சாவியை பெற்றுக்கொண்ட தீவிரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.மேககுமார் ஷாவின் வீட்டை திறந்து சோதனை செய்த போது அதிகாரிகளே வியப்பில் வாயடைத்து போகும்படியான அதிர்ச்சி அங்கு காத்திருந்தது.  வீடு முழுவதும் எங்கு திரும்பினாலும் தங்க கட்டிகள், தங்க நகைகள் கிடந்தன. விலை உயர்ந்த அதுவும் கோடிக்கணக்கில் விலை மதிக்கத்தக்க வெளிநாட்டு கை கடிகாரங்களும் கிடைத்தன. ரொக்கமாக கட்டுக் கட்டாய் பணமும் இருந்துள்ளது.

இதையும் படிங்க: ஐயோ கடவுளே... இவ்வளவா..? புரோக்கரிடம் இருந்து மீட்கப்பட்ட 100 கிலோ தங்கம்..!

அங்கு சிக்கிய பணத்தின் அளவு அதிகமாக இருந்ததால் அதை எண்ணுவதற்காக எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அங்கே வைத்தே சிக்கிய தங்க நகைகள், தங்க கட்டிகள் எடை போடப்பட்டன. மொத்தமாக வீட்டின் உள்ளே இருந்து வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6. கிலோ தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர வீட்டில் இருந்து ரொக்கமாக ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வளவு பணமும் எப்படி ஒரே இடத்தில் கொண்டுவரப்பட்டது. இவ்வளவு நகைகள், தங்க கட்டிகள் எவ்வாறு அரசுக்கு தெரியாமல் ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டது. வியாபர நோக்கம் அல்லாத, சேமிப்பில் வைப்பது போல் எப்படி ஒரு தனி மனிதனால் 108 கிலோ தங்கம் சேர்க்க முடிந்தது என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து வீட்டில் குடியிருக்கும் மேககுமார் ஷா அவருடைய தந்தை மகேந்திர ஷாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் துபாயில் வசிப்பதால் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும்  பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை தீவிரவாத தடுப்பு படையினர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிரவாத தடுப்பு படை டி.எஸ்.பி. சுனில் ஜோஷி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேககுமார் ஷா மற்றும் மகேந்திர ஷா ஆகியோர் போலி நிறுவனங்கள் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்திருக்கலாம் என வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து  விசாரணை நடக்கிறது.  மேககுமார் ஷா வீட்டின் சாவியை வைத்திருந்த அவரது உறவினர்களிடமும் விசாரணை நடக்கிறது. 
 

இதையும் படிங்க: ‘நாங்கள் அப்பாவி..! குஜராத் கலவரம் தொடர்பாக தவறான கதைகள் பரப்பப்பட்டன’.. பிரமதர் மோடி ஓபன்டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share