‘நாங்கள் அப்பாவி..! குஜராத் கலவரம் தொடர்பாக தவறான கதைகள் பரப்பப்பட்டன’.. பிரமதர் மோடி ஓபன்டாக்..!
குஜராத் கலவரம் தொடர்பாக தவறான கதைகள் பரப்பப்பட்டன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் தொடர்பாக தவறான கதைகள், கட்டுக்கதைகள் பரப்பிவிடப்பட்டன. மத்தியில் ஆட்சியில் இருந்த எனது அரசியல் எதிரிகள் நான் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால், நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்து நாங்கள் அப்பாவி என தீர்ப்பளித்தது என்று பிரதமர் மோடி வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கணினி விஞ்ஞானி மற்றும் பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனுக்கு பிரதமர் மோடி 3 மணி நேரம் வரை நேர்காணல் அளித்தார். லெக்ஸ் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், அதேநேரம், வெளிவராத பல்வேறு தகவல்களையும் தெரிவித்தார்.
அப்படித்தான் குஜராத் கோத்ரா கலவரம் தொடர்பாக பல்வேறு தகவல்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார். 2002ம் ஆண்டு குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து கோத்ரா நகரில் ஏற்பட்ட கலவரம் நாட்டையே உலுக்கியது, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், இருசமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் நாட்டியை உலுக்கியது. இந்த கலவரம் நடந்தபோது குஜராத் மாநிலத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். இந்த கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் ஆட்சியைக் கலைக்க வேண்டும், அவர் மீது விசாரணை நடத்த வேண்டும், கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதையும் படிங்க: போதையில் கண்மூடித்தனமாக பாய்ந்த கார்.. பெண் மீது ஏற்றி கொன்ற வாலிபன் கைது.. ஓம் நமச்சிவாயா என கத்திய குரூரம்..!
இந்தக் கலவரம் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
குஜராத் வரலாற்றிலேயே 2002ல் நடந்த கோத்ரா வன்முறைதான் மிகப்பெரியது என தவறான தகவல்களும், கட்டுக்கதைகளும் பரப்பிவிடப்பட்டன. 2002ம் ஆண்டுக்கு முந்தைய புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால், குஜராத்தில் அடிக்கடி கலவரங்கள் நடந்துள்ளன என்பது தெரியவரும். ஊரடங்கு உத்தரவுகளும் அடிக்கடி பல்வேறு நகரங்களில் போடப்பட்டிருக்கும். சைக்கிள்கள் மோதிக்கொண்டாலோ அல்லது பட்டங்கள் பறக்கவிடும்போது மோதிக்கொண்டால்கூட இரு தரப்பு சமூகத்துக்கு இடையே கலவரங்கள் நடந்ததுண்டு.
கடந்த 1969ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் 6 மாதங்கள் வரை நீடித்தது. இதுவைர எங்குமே நடந்திராத சம்பவமாக இருந்தது. குஜராத் கலவரம் கூட நான் குஜராத் சட்டப்பேரவைக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 நாட்களுக்குப்பின் நடந்தது.
குஜராத் கலவரம் என்பது மிகப்பெரிய சோகம், கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. மக்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். காந்தஹார் விமானக் கடத்தல், நாடாளுமன்றத் தாக்குதல், அல்லது மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில், பலர் கொல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டிருந்தால் நிலைமை எவ்வளவு பதற்றமாகவும் நிலையற்றதாகவும் இருந்தது என்பதை நீங்களே கற்பனை செய்யுங்கள்.
ஆனால், எதுவும் நடக்கக்கூடாது என்று நாங்களும் விரும்பினோம், அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருந்தது. கோத்ராதான் வன்முறை ஏற்பட முக்கியமான பகுதியாக இருந்தது. கோத்ரா வழக்கு தொடர்பாக பொய்யான தகவல்கள், கட்டுக்கதைகள் பரப்பிவிடப்பட்டன. இந்த வழக்குகளை நீதிமன்றம் முழுமையாக விசாரணை நடத்தி, நாங்கள் அப்பாவிகள், குற்றமற்றவர்கள் என்பதை கண்டறிந்தது. இந்தக் கலவரத்துக்கு உண்மையாகவே காரணமானவர்கள் நீதிமன்றத்தில் இருந்து நீதியைச் சந்திப்பார்கள்.
எங்களுடைய அரசியல் எதிரிகள், கலவரம் நடந்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் (காங்கிரஸ்) இயல்பாகவே எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள். அந்த நேரத்தில் குஜராத் கலவரத்தில் எங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி எங்களை தண்டிக்க விரும்பினார்கள். ஆனால் தீவிரமான முயற்சிகள், சட்ட நடவடிக்கைகளால் நீதிமன்றம் வழக்குகளை தீவிரமாக ஆய்வு செய்து, முழுமையாக விசாரணை நடத்தி நாங்கள் குற்றமற்றவர்கள் அப்பாவிகள் என விடுவித்தது.
குஜராத் கலவரத்துக்குப்பின், கடந்த 22 ஆண்டுகளாக அங்கு ஒரு சிறிய கலவரம் கூட ஏற்படவில்லை,குஜராத் முழுமையாக அமைதியாக இருக்கிறது. என்னுடைய அணுகுமுறை என்பது எப்போதுமே வாக்குவங்கி அரசியலை புறந்தளித்தான் இருக்கும்.எங்களின் மந்திரம் என்பது, அனைவருக்குமான அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசுதான். சமாதானப்படுத்தும் அரசியலை விட்டு விலகி, எங்கள் முன்னோர் காட்டிய அர்ப்பணிப்பு அரசியலை பின்பற்றுகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 18 மாதங்களாக இளம்பெண் அனுபவித்த நரகம்.. நண்பன் போல் பழகி நாசம் செய்த கயவன்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்..!