×
 

பச்சிளம் குழந்தையின் கழுத்தில் கத்தி..! தாயை சிதைத்த மிருகங்கள்..! வீட்டிற்குள் நடந்த கொடூரம்..!

இரவு வேளையில் கதவை சாத்தி வைத்து வீட்டில் அமர்ந்திருந்த நிலையில், போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த காதல் திருமணம் செய்த தம்பதியினர் ஆறு மாத பச்சிளம் குழந்தையுடன் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். இருவரும் பெற்றோரை எதிர்த்து  காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த இளம் தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை இருக்கும் நிலையில், அவரது கணவர் வேலைக்காக கேரளா சென்றுள்ளார். இங்கு உள்ள வீட்டில் அந்த பெண் தனது பச்சிளம் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி இரவு வேளையில் கதவை சாத்தி வைத்து வீட்டில் அமர்ந்திருந்த நிலையில், போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அந்த பெண் சத்தம் போட முயலவே ஒருவன் அந்த பெண்ணின் வாயைப் பொத்தி மடக்கி பிடித்துள்ளான். மற்றொருவன் அந்த பச்சிளம் குழந்தையை தூக்கி பிடித்து கழுத்தில் கத்தியை வைத்துள்ளான். தங்கள் இச்சைக்கு இணங்கவில்லை என்றால் அறுத்து போட்டு விடுவோம் என்று கூறி கடுமையாக மிரட்டியதால் சத்தம் போட இயலாமல் கண்ணீர் விட்டு கதறி உள்ளார். இருந்தாலும் விடாமல் அந்த பெண்ணிடம் இரு அரக்கர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காதலனை தேடிச் சென்ற 14 வயது சிறுமி..! அறையில் அடைத்து வைத்து பலாத்காரம்..! 3 நாட்கள் அனுபவித்த சித்ரவதை..!

இதனை வெளியில் சொன்னால் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றதாகவும், பின்னர் நள்ளிரவு 1.30 மணி அளவில் அதே கொடூரர்கள் திரும்பி வந்து மீண்டும் குழந்தையை தூக்கி வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார் பாதிக்கப்பட்ட பெண்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியூரில் இருந்த தனது கணவரிடம் செல்போன் மூலம் தெரிவித்ததாகவும் மூன்று தினங்கள் கழித்து தனது கணவர் ஊர் திரும்பியதால் அவருடன்  வந்து புகார் அளித்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட இரு ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட காம அரக்கர்களின் அங்க அடையாளங்கள் மூலம் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய மாரிச்செல்வம் மற்றும் மாரியப்பன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

மலைப்பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் சுற்றி வளைத்த நிலையில் தப்பி ஓடிய மாரியப்பனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவனை தூக்கிச் சென்று போலீசார் மாவு கட்டு போட்டு விட்டனர். அந்த பெண்ணிற்கு இரு முறை ரணவேதனை கொடுத்த மாரி செல்வம் போலீசரை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் மாரி செல்வத்தின் இடது காலில் துப்பாக்கி கொண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாமல் தரையில் வீழ்ந்தான். அவனை போலீசார் தூக்கி சென்று தூத்துக்குடி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தாய்மார்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தனியாக இருக்கும் பெண்கள் கதவை பூட்டிக் கொண்டிருக்கவும், இரவு நேரத்தில் அறிமுகம் இல்லா நபர் கதவை தட்டினால் திறக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: கோவில்பட்டியில் பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து சான்றிதழ் தர மறுப்பு - தனியார் கல்வி நிறுவன நிர்வாகி மீது வன்கொடுமை வழக்கு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share