×
 

அம்மா அம்மா தான்.. இறப்பிலும் பலருக்கு வாழ்வு தந்த தாய்..!

டெல்லியில் மூளை சாவடைந்த கர்ப்பிணியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. முன்னதாக அப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம் தரித்த ஒரு பெண் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் 8 மாத குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது. இருப்பினும் தவமிருந்து பெற்ற அந்த குழந்தையை பார்க்கும் வாய்ப்பு கூட இல்லாமல் தாய்மூளை சாவு அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் பலருக்கு அந்த கருணை தாய் மறுவாழ்வு கொடுத்திருக்கிறார். 

டெல்லியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் அஷிதா. 38 வயதான அவர்  தனியார் நிறுவனத்தில் வாடிக்கையாளர் நலன் மேலாளராக பணிபுரிந்து வந்தார். குழந்தை இல்லாமல் இருந்தது வந்தவர் திருமணத்திற்கு பின் ஆறு வருடங்கள் கழித்து கர்ப்பம் தரித்தார். எட்டு மாத கர்ப்பமாக இருந்த போது  அவருக்கு திடீரென மூளை பக்கவாத நோய் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இதையும் படிங்க: மீண்டும் 2 ஜி வழக்கு… ஆட்டத்தை ஆரம்பித்த சி.பி.ஐ- ஆ.ராசாவுக்கு பெரும் சிக்கல்..!

தீவிர கண்காணிப்பு பிரிவில் செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த பெண்ணுக்கு எட்டு மாதத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் குழந்தையை பிரசவிக்க செய்தனர். குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.  ஆனால் காத்திருந்து பெற்ற குழந்தையை கண்ணால் கூட பார்க்கும் முன்பே அந்த தாய் மூளைச்சாவடைந்தது நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது. சோகத்திலும் சற்று ஆறுதலான விஷயம் என்னவென்றால் அவருடைய குடும்பத்தினர் அஷிதாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்ததுதான். 

அவருடைய சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் வெண் விழி படலம் ஆகியவற்றை அஷிதா தானமாக வழங்கினார். இதன் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடிந்தது. அஷீதாவின் கணவர் பெயர் ராஜுல் ராம்பால். வணிக மேம்பாட்டு நிர்வாகி. அஷிதாவின் மாமனார் ராஜேஷ் ராம் பால் இது குறித்து கூறும் போது, "மருமகளுக்கு திடீரென மூளை பக்கவாத நோய் ஏற்பட்டதால் உடனடியாக ஆர்ட்டெமிஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். 

அங்கு சென்றதும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் டாக்டர் குழந்தையை வெளியே எடுத்ததாக குழந்தையை கையில் ஏந்தி படி கண்ணீர் மல்க கூறினார். மூளை மரணம் என்பது மூளையின் செயல்பாடுகளை மீள முடியாத இழப்பை குறிக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சட்டத்தின்படி நிபுணர் குழுவால் மூளைச்சாவுக்கு சான்று அளிக்கப்பட வேண்டும். நோயாளி மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டவுடன் இதயம் சிறுநீரகம் கல்லீரல் மற்றும் கணையம் உள்ளிட்ட பல உறுப்புகள் மற்றும் திசுக்களை தானமாக பெற முடியும். இருப்பினும் இதயத்தை 55 அல்லது 60 வரை மட்டுமே தானம் செய்ய முடியும்" என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: பிரயாக்ராஜ் நதி நீர் குளிப்பதற்கு தகுதியற்றது..! மனித கழிவு கிருமிகள் அளவு அதிகரிப்பு என எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share