நகைக்கடன்களுக்கு விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் முத்தூட், ஐஐஎப்எல் பங்குகள் சரிவு..!
தங்க நகைக்கடன்களுக்கு விரைவில் முழுமையான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட இருக்கிறோம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் மல்ஹோத்ரா அறிவித்ததயைடுத்து பங்குச்சந்தையில் முத்தூட், ஐஐஎப்எல் நிதிநிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா நிதிக்கொள்கை அறிவிப்புக் கூட்டத்துக்குப்பின் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தங்க நகைகள், ஆபரணங்களை அடமானம் வைத்து சந்தை மதிப்புக்கு ஏற்ப வாடிககையாளர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதற்கு தங்கநகைக் கடன் என்று அழைக்கப்படுகிறது.இந்த நகைக்கடன் வழங்கும் நிறுவனங்கள் வருமானம் ஈட்டவும், நுகர்வுக்காகவும் தங்க நகைகளை அடமானம் எடுக்கிறார்கள்.
பல்வேறு வகையான ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையே வழிகாட்டுதல்கள் ஒரே மாதிரியாக இருக்க அவற்றின் இடர்களைத் தாங்கும் திறன்களைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கடன்களுக்கான விதிமுறைகள், நெறிமுறைகளை முழுமையான அளவில் உருவாக்கி விரைவில் ரிசர்வ் வங்கி வெளியிடும். விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த வரைவு விதிகள் வெளியிடப்பட்டு மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி..! கடனுக்கான வட்டிவீதம் தொடர்ந்து 2வது முறையாகக் குறைத்தது ரிசர்வ் வங்கி..!
நகைக் கடன்களுக்கான விதிகள், புதிய நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட சிறிது நேரத்தில் பங்குச்சந்தையில் முத்தூட் பேங்கர்ஸ், ஐஐஎப்சிஎல் ஆகிய தங்கக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பங்குகள் திடீரென சரிந்தன. ஐஐஎப்எல் பங்கு மதிப்பு 8.40 சதவீதம் சரிந்து ரூ.305.55 ஆகவும், மணப்புரம் பைனான்ஸ் பங்குமதிப்பு 3.12 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தது. முத்தூட் பைனானஸ், தங்கக்கடன் ஆகியவற்றின் பங்கு மதிப்பு 11.63% குறைந்தது.
அடுத்தடுத்து வட்டிக் குறைப்பு..!
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில் “ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை என்பது நடுநிலை என்றநிலையில் இருந்து நுகர்வோர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அடுத்தடுத்து மாற்றப்படும். அதாவது ரிசர்வ் வங்கிக்கு அடுத்துவரும் மாதங்களில் இரு வாய்ப்பு மட்டும்தான் இருக்கிறது. முதலாவது, ரேட்கட் எனப்படும் கடனுக்கான வட்டிவீதத்தைக் குறைப்பது அல்லது நிலையாக வைத்திருப்பது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு என்பது சந்தையில் இருக்கும் பணப்புழக்க நிலைமைகளுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கக்கூடாது” என மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு முதல்வரின் சுயநல நாடகம்..! திமுகவை ரோஸ்ட் செய்த அண்ணாமலை..!