சுங்க சாவடிகளில் உயரும் கட்டணம்.. ஆம்னி பேருந்துகள் சங்கம் கண்டனம்..
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 40 சுங்க சாவடிகளில் ஐந்து முதல் 25 ரூபாய் வரையில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுங்கச்சாவடியின் கட்டணத்தை உயர்த்த கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு அதிர்ச்சி அளிக்கின்றதாகவும், இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை மேலும் பாதிக்கக்கூடும். சுங்கச்சாவடி கட்டண உயர்வு பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் மேலும் பொருட்களின் விலை உயரக்கூடும்.
இதையும் படிங்க: புதிதாக திறக்கப்படவிருந்த சுங்கச்சாவடி.. சூறையாடிய கிராம மக்கள்..!
எனவே கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை தவிர்க்க வலியுறுத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 சுங்கச்சாவடிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கான்வாயில் குறுக்கே புகுந்த கால்நடைகள்… இறங்கி மாட்டின் முன் நின்று தில்லாக ரெய்டுவிட்ட முதல்வர்..!