தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு.. ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களிலும் நாளை ஆறு மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என எச்சரித்துள்ளது. அதேபோன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என கணித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் ஐ ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு..!
இதையும் படிங்க: அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?