×
 

லாரி டிரைவர்களை வெட்டி கொள்ளை.. புதுவை ரவுடி கடலூரில் என்கவுன்டர்.. அதிரடி ஆக்‌ஷன் காட்டிய போலீஸ்..!

கடலூர் மாவட்டம் புதுச்சத்தரித்தில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி ரவுடி மொட்டை விஜயை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் லாரி டிரைவர்கள் லாரியை ஒரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பது வழக்கம். நீண்ட தூரம் பயணிக்கும் லாரி டிரைவர்கள், இவ்வாறு ஓய்வெடுப்பதன் மூலம் களைப்பை போக்கி புத்துணர்வு பெறுகின்றனர். இதனால் விபத்துகளும் குறைகின்றன.

இந்நிலையில் இவ்வாறு ஓய்வெடுக்கும் லாரி ஓட்டுநர்கள் தனிமையில் இருப்பதை பயன்படுத்தி ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. லாரி டிரைவர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டும் அந்த கொள்ளை கும்பல், லாரி டிரைவர்களை காயப்படுத்தி பணம், செல்போன் போன்றவற்றை கொள்ளையடித்து தப்பித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று இரவும் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் எம்.புதூர், ஆணையம் பேட்டை, பெரியப்பட்டு ஆகிய 3 இடங்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. லாரியை ஓரங்கட்ட், ஓய்வெடுக்கும் டிரைவர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர் லாரி டிரைவரின் செல்போனை பிடுங்கியதோடு மட்டுமல்லாமல், அவரின் வங்கி கணக்கு, ஜிபே, போன் பே போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை எண்களை பெற்றுக்கொண்டும் கொள்ளையடித்துள்ளனர். நேற்று ஒரே இரவில் 3 இடங்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறியதால் போலீசார் அதிரடியாய் களமிறங்கினர்.

இதையும் படிங்க: ‘பசியோடு இருப்பவர் நூலகத்துக்கு செல்வாரா..?’ கிராமங்களில் நூலகம் கேட்டவருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!

சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று லாரி டிரைவர்களிடம் விசாரணையை துவங்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்திற்கு பின்னால் இருப்பது புதுச்சேரியை சேர்ந்த ரவுடி மொட்டை விஜய் என்பது தெரிந்தது. இவரது குற்றச் செயல்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் மாறியது. எனவே உடனே விஜயை கைது செய்ய போலீசார் களமிறங்கினர்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் மொட்டை விஜய் என்ற பிரபல ரவுடி. இவர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது. இனியும் விஜயை வெளியில் விட்டுவைக்க கூடாது என முடிவு செய்த போலீசர் கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிட்டனர். செல்போன் எண் அடிப்படையில் மொட்டை விஜய் இருக்கும் இடத்தை போலீசார் ட்ரேஸ் செய்தனர். எம்.புதூர் பகுதியில் விஜய் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் சென்று மொட்டை விஜய்யை பிடிக்க முயற்சி செய்தனர். 

அப்போது வீச்சருவாளால் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். காயமடைந்த கோபி மற்றும் கணபதி ஆகிய இரண்டு போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே போலீசார் தற்காப்புக்காக விஜய்யை என்கவுண்டர் செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட மொட்டை விஜய்யின் உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. லாரி டிரைவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 

இதையும் படிங்க: வக்ஃபு வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் எவ்வளவு, அசையா சொத்துக்கள் மதிப்பு எவ்வளவு..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share