×
 

சாம்சங் ஆலை ஊழியர்கள் முற்றுகை போராட்டம்..! திணறிய ஆலை நிர்வாகம்...!

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலையை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை, இந்தியாவில் உள்ள சாம்சங்கின் இரண்டு உற்பத்தி ஆலைகளில் ஒன்று. அங்கு தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற நுகர்வோர் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 1500 மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சாம்சங் ஆலையில் ஊழியர்கள் முற்றுகையிட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசார் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். ஆலையின் முன்பாக நிற்க வேண்டாம் என்ற கோரிக்கையை ஊழியர்கள் நிராகரித்த நிலையில், ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: காலில் செருப்பை போடாத அண்ணாமலை..! எகிறும் அரசியல் வேல்யூ..!

சாம்சங் ஆலையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களில் 23 பேரை சட்டம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. இந்த நிலையில் முற்றுகை போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சாம்சங் ஆலை ஊழியர்களை அழைத்து வரும் பேருந்துகள் வரும் பாதையில் அனைவரும் குவிந்தனர். பின்னர் உள்ளே செல்ல இடையூறாக நிற்கும் ஊழியர்களை நகர்த்தி விட்டு வாகனங்களை செல்ல அனுமதித்தனர். கடந்த 31 நாட்களாக பணிக்கு வராமல் இருந்ததால் ஆக்சஸ் அட்டை முடக்கப்பட்டுள்ளதாகவும் எனவே பொறுமை காக்குமாறும் ஆலை நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனிடையே முடக்கப்பட்டு இருந்த ஆக்சஸ் கார்டுகளை மீண்டும் செயல்பட வைக்க ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்ட நிலையில் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். பின்னர் ஆக்சஸ் கார்டுகள் முடக்கப்பட்ட ஊழியர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

 

 

இதையும் படிங்க: விவசாயிகள் 2 நாட்கள் உண்ணாவிரதம் நடத்தலாம்... அனுமதி வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share