மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கம்யூட்டர் லேப்பில் அத்துமீறிய ஆசிரியர்.. புகார் பெட்டியால் வெளிவந்த உண்மை..!
கம்யூட்டர் லேப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கணினி ஆசிரியராக டேவிட் மைக்கேல் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அதே பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது சீண்டல் அதிகமாகவே மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதனை வெளியில் சொன்னால் எங்கே தங்களது படிப்பு நிறுத்தப்படுமோ என்று அஞ்சி உள்ளனர்.
இந்நிலையில் அவரது பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் இதுகுறித்து புகார் எழுதி போட்டுள்ளார். கணினி ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பயம் காரணமாக மாணவி தனது பெயரை குறிப்பிடவில்லை. மாணவியின் பெயர் குறிப்பிடாததால் பள்ளியில் பணிபுரிந்த மற்ற ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இது குறித்து மறைமுகமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தம்பி.. வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. விபத்து நாடகமாடிய இருவர் கைது!
மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் நாள்தோறும் ஆய்வு செய்து வந்தனர். கணினி ஆசிரியர் டேவிட்டின் நடவடிக்கைகளை நாள்தோறும் கவனித்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட மூன்று மாணவிகளை மட்டும் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல், வகுப்பு நேரத்தில் அடிக்கடி கணினி பயிற்சி அளிக்கும் அறைக்கு தனியாக அழைத்துச் சென்றதை ஆசியர்கள் கவனித்தனர். அங்கு தான் மாணவிகளுக்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனை மறைந்திருந்து நேரில் பார்த்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தலைமை ஆசிரியரும் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல் அழைத்து விசாரித்துள்ளார்.
தனியே மாணவிகளை அழைத்து அவர்களிடமும் தலைமை ஆசிரியர் விசாரணை செய்தார். தான் சிக்கிக் கொண்டதை அறிந்து கொண்ட டேவிட் மைக்கல், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அன்றைய தினமே தலைமறைவானார். இதுகுறித்து 3 மாணவிகளும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் காவல் துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகாரின் உண்மை தன்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான டேவிட் மைக்கேலை போலீசார் தேடிவந்தனர்.
தொடர்ந்து கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த ஆசிரியரை திருவேங்கடம் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட டேவிட் மைக்கலை, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பின்னர் சிறையில் அடைத்தனர். அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: சீரியஸ் ரேப்பிஸ்ட் கைது..! சிறுமிகளை மட்டும் குறிவைத்து சிதைக்கும் சைக்கோ..!