கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்.. அண்ணனையே போட்டுத் தள்ளிய தங்கை..!
போலீஸ்காரன் உடனான கள்ளக்காதலை உயரதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்து கள்ளக்காதலனை சஸ்பெண்ட் செய்ய வைத்ததால் தங்கையே திட்டமிட்டு அண்ணனை கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த சாய் பிரகாஷ். தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல சேவைத் திட்டங்களால் செய்து தனக்கென ஒரு சிறப்பு முத்திரையைப் பதித்த இந்த இளைஞர். இவர் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி திடீரென காணாமல் போனார். அவரின் செல்போன் நெட்வொர்க் ஆந்திராவின் பாலகொல்லுவைக் காண்பித்தது.
இது தொடர்பாக, சாய் பிரகாஷின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹனம்கொண்டா காவல் உதவி ஆணையர் தேவேந்தர் ரெட்டி, இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் விசாரனை மேற்கொண்டனர். இந்த நிலையில் சாய் பிரகாஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
வெங்கடபுரம் காவல் நிலையத்தில் முன்பு பணிபுரிந்த ஸ்ரீனிவாஸ் என்ற கான்ஸ்டபிள், சாய் பிரகாஷின் தங்கை நீலிமாவுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவைக் வைத்து கொண்டிருந்ததும், இதனை சாய் பிரகாஷ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரை இடைநீக்கம் செய்ததும் விசாரணையில் தெரிந்தது. இதனால் சாய் பிரகாஷை, ஸ்ரீனிவாஸ் திட்டமிட்டு கொலை செய்ததை போலீசார் கண்டறிந்தனர். இதற்காக ஏப்ரல் 15 ஆம் தேதி ஹனுமகொண்டாவிற்கு வந்த சாய் பிரகாஷை கொல்ல ஸ்ரீனிவாஸ் திட்டமிட்டார். இதற்காக நான்கு பேருக்கு பணம் கொடுத்த ஸ்ரீனிவாஸ், சாய் பிரகாஷின் காரை ஒரு ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்றார்.
ஹனம்கொண்டாவில் உள்ள கோபால்பூர் அருகே காரை ஆட்டோவில் மோதி காரை நிறுத்தினர். பின்னர் முழு கும்பலும் அவரது காரில் ஏறினர். காரில் அவரை கண்மூடித்தனமாக அடித்து, சால்வையால் கழுத்தை நெரித்து கொன்றனர். அதே காரில் ஹுஸ்னாபாத் நோக்கிச் சென்று, ஹுஸ்னாபாத் அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாய் பிரகாஷ் உடலை வீசினர்.
ஏப்ரல் 17 ஆம் தேதி அப்பகுதி மக்கள் கிணற்றில் ஒரு சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஹுஸ்னாபாத் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றினர். ஆனால் கிணற்றில் இருந்த மீன்கள், உடலை அடையாளம் காண முடியாத வகையில் சிதைத்து இருந்ததால் ஹுஸ்னாபாத் நகராட்சி ஊழியர்கள் மூலம் உடலை அதன் அருகிலேயே புதைத்தனர்.
இதையும் படிங்க: கணவனை தீர்த்துக்கட்ட ரூ.20 லட்சம்.. கூலிப்படையிடம் பேரம்.. செட்டில்மெண்ட் செய்யாததால் சிக்கிய பரிதாபம்..!
இருப்பினும் சாய் பிரகாஷ் கொலை வழக்கில் போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக, சாய் பிரகாஷின் செல்போனை ஒரு ரயிலில் வீசி சென்றனர். அந்த ரயில் ஆந்திர மாநிலம் பாலகொல்லுவை அடைந்ததும் செல்போன் சுவிட் ஆப் ஆனது. போலீஸ் விசாரணையில் கடைசியாகக் காட்டப்பட்ட இடம் பாலகொல்லு என்பதால் அனைவரின் கவனமும் பாலகொல்லு பக்கம் திரும்பியது.
ஆனால் அதன் பிறகு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தனக்கு எதிராக போலீசில் புகார் அளித்து, தனது பணி இடைநீக்கத்திற்கு காரணமான சாய் பிரகாஷ் மீது வெறுப்பு கொண்ட ஸ்ரீனிவாஸ், அவரை கொலை செய்ய சரியான நேரத்திற்காக காத்திருந்து கொலை செய்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
ஸ்ரீனிவாஸ் கொடுத்த பணத்தை பெற்று கொண்டு கொலைக்கு துணையாக இருந்த தேவிலி சாய், அருண் குமார், அகில் மற்றும் ராஜு காதலி நிர்மலாவையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு ஏர் பிஸ்டல் துப்பாக்கி, ஒரு கார் மற்றும் இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இருப்பினும், கைது செய்யப்படுவதற்கு முன்பே, சாய் பிரகாஷ் கொலைக்கு நிர்மலா தான் காரணம் என்பது தெரியவந்த போது, முழு கிராமமும் அதிர்ச்சியடைந்தது. வெங்கடபுரம் கிராம மக்களும் அவரது கணவரும் அவரது தலைமுடியைப் பிடித்து அடித்துக் அவரை சாலையில் இழுத்து சென்று, செருப்பால் அடித்து, வெங்கடாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
பல தொண்டு திட்டங்களால் தனக்கென ஒரு சிறப்பு முத்திரையைப் பதித்த சாய் பிரகாஷின் கொலையைத் தொடர்ந்து வெங்கடபுரத்தில் சோகமான சூழல் நிலவுகிறது. சாய் பிரகாஷின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதற்காக, வணிக நிறுவனங்கள் உட்பட முழு நகரமும் தானாக முன்வந்து பந்த் நடத்தியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இதையும் படிங்க: 70 வயது மூதாட்டி கொலை.. சடலத்தின் மீது நடனம்.. போட்டு தள்ளியதை உளறிய சிறுவன்..!