×
 

கணவனை தீர்த்துக்கட்ட ரூ.20 லட்சம்.. கூலிப்படையிடம் பேரம்.. செட்டில்மெண்ட் செய்யாததால் சிக்கிய பரிதாபம்..!

தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் முடிகொண்டா மண்டலத்தில் உள்ள சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தோட்டா தர்மா ராவ். இவரது மனைவிக்கு சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் டிரைவராக உள்ள ராமாஞ்சனேயலு உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம், தர்மாவுக்கு தெரிந்ததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்த மனைவி, அதனை தனது காதலன் ராமாஞ்சனேயலுவிடம் கூறி உள்ளார். எவ்வாறு கொலை நடக்க வேண்டும் என தனது திட்டத்தை கூறினார். இதனையடுத்து ராமாஞ்சனேயலு பருகுடேம் கிராமத்தைச் சேர்ந்த தண்ட வெங்கட நாராயணாவை என்கிற வெங்கட்டை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர் மூலம் வெங்கட் தனது நண்பரான ரவுடி விஜயகுமாரை அறிமுகப்படுத்தினார். 

இதனையடுத்து கொலைக்கு ₹20 லட்சம் வழங்க தர்மாவின் மனைவி ஒப்பு கொண்டு, முன் தவனையாக ₹5 லட்சம் ரூபாயை தனது காதலன் ராமாஞ்சனேயலு மூலம் கொடுத்தார். இதனையடுத்து அந்த கொலைகார கும்பல், தர்மாவை மார்ச் 12 ஆம் தேதி கம்மம் நகரின் தன்சலபுரம் அருகே கடத்தி கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன் படி தர்மாவை கடத்தினர். ஆனால் கொலை செய்வதற்கு முன்பு மீதமுள்ள பணத்திற்காக ராமஞ்சநேயாவைத் தொடர்பு கொண்டனர். ஆனால் ராமாஞ்சனேயலு பதில் சொல்லாமல் போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். இதனால் பின்வாங்கி விட நினைத்த தர்மாவை கடத்தியவர்கள்,  அவரை மிரட்டி 1,50,000 ரூபாய் பணத்தை ஜீபே மூலம் பெற்றுக் கொண்டனர். மேலும் அவரிடம் இருந்த   தங்கச் செயினை பறித்து கொண்டு தர்மாவை விட்டு சென்றனர். 

இதையும் படிங்க: பூட்டிய காருக்குள் சிக்கிய குழந்தைகள்.. மூச்சு திணறி பலியான சோகம்.. ஆட்டோமெட்டில் லாக்கால் வந்த வினை..!

அவர்களின் பிடியிலிருந்து தப்பிய தர்மா, தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார்? என்று தெரியாமல்     தினந்தோறும் ஆலோசித்து வந்தார். இறுதியாக இந்த மாதம் 11ம் தேதி கம்மம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நகர காவல் உதவி ஆணையர் ரமண மூர்த்தியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது உண்மை தெரிய வந்தது.  

இந்த நிலையில் கானாபுரம் ஹவேலி இன்ஸ்பெக்டர் பானு பிரகாஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  தர்மா மனைவியில் கள்ளக்காதலன் சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமாஞ்சநேயுலு, பருகுடேம் கிராமத்தைச் சேர்ந்த தண்ட வெங்கட ரமணனிடம், ரவுடி  பகதலா விஜய் குமார் உள்ளிட்டோர்  கம்மம் நகரில் உள்ள செருகுரி மாம்பழத் தோட்டத்தில் இருப்பதாகக் தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். தோட்டத்தில் இருந்த ராமாஞ்சநேயுலு,  வெங்கட நாராயணா,  விஜய் குமார், வெமுலா கிருஷ்ணா, புரி விஜய் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தர்மாவை கடத்த பயன்படுத்திய இரண்டு கத்திகள், ஒரு துப்பாக்கி, ₹90 ஆயிரம் பணம், ஒரு கார், 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே கள்ளக்காதலனை ஏவி கணவனை கொலை செய்ய திட்டமிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகாவின் இதயத்தை உடைத்த தெலுங்கானா அரசு... பற்றி எரியும் விவகாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share