×
 

மாணவனை தலையில் அடித்த டீச்சர்.. கண்பார்வை போய்விட்டதாக கதறல்.. PT டீச்சர் சஸ்பெண்ட், HM-க்கு டிரான்ஸ்ஃபர்..!

விழுப்புரம் அருகே 6ம் வகுப்பு மாணவரை உடற்கல்வி ஆசிரியர் அடித்ததால் மாணவர் உயிர் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவனது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மொத்தம் 111 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கள்ளிகுளத்தை சேர்ந்த மாணவன் சாது சுந்தர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று வகுப்பில் உடன்படித்த ஆறாம் வகுப்பு மாணவி, பள்ளியில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் செங்கேணியிடம், சக மாணவன் சாது சுந்தர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக சாது சுந்தரை அழைத்து உடற்கல்வி ஆசிரியர் செங்கனி, அவர் வைத்திருந்த குச்சியால் சாது சுந்தரை அடித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சிறிது நேரத்தில் தனக்கு கண்பார்வை தெரியவில்லை எனவும், வாந்தி மயக்கம் வருவதாகவும் சாது சுந்தர் தெரிவித்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சாது சுந்தரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள குச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றனர். மேலும் தலைவலி அதிகம் இருப்பதாக மாணவர் சாது சுந்தர் தெரிவித்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கம்யூட்டர் லேப்பில் அத்துமீறிய ஆசிரியர்.. புகார் பெட்டியால் வெளிவந்த உண்மை..!

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக மாணவருக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவனின் பார்வையை பரிசோதித்த போது பார்வை நன்றாக உள்ளதாக உடன் வந்த ஆசிரியர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தலைவலி இருப்பதாக மாணவர் தெரிவித்ததால் தலையில் ஸ்கேன் எடுக்க அடுத்த கட்ட நடவடிக்கையை மருத்துவர்கள் மேற்கொண்ட நிலையில் பெற்றோர்கள் வந்தவுடன் பெற்றோரிடம் மாணவரை ஒப்படைத்துவிட்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு மீண்டும் திரும்பி விட்டனர். 

இந்நிலையில் மாணவருக்கு உடல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டதாகவும் தலைவலி அதிகம் இருப்பதாக மாணவர் தெரிவித்ததால்  மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டான். அப்க்கு தொடர்ந்து மாணவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவரை தாக்கிய ஆசிரியரை கைது செய்யக்கோரி உறவினர்கள் அரசு உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த வளவனூர் காவல்துறையினர் பொதுமக்களிடம் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை அடுத்து  உறவினர்கள் அமைதி காத்த நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பள்ளிக்கு விரைந்து வந்தார். தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி இடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் மாணவரை அடித்ததை ஒப்புக்கொண்டார். தலைமை ஆசிரியர் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேற்று தெரிவித்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் விசாரணை மேற்கொண்டு மாணவரை அடித்த செங்கனியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜோதி லட்சுமியிடம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் தெரிவிக்கையில் மாணவரை அடித்த உடற்கல்வி ஆசிரியரை கைது செய்ய வேண்டும். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

இதையும் படிங்க: யார் இந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன்..? அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட இந்திய மாணவி..! என்ன காரணம்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share