×
 

கட்டம் கட்டி அடிக்கும் டிரம்ப்... கெஞ்சி கதறும் சீனா!!

அமெரிக்காவின் புதிய அறிவிப்பு சீனாவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனிடயே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களின் சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தார்.  மேலும் அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாகவும் தெரிவித்தார். இதன்மூலம் சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் உள்ளனர் நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம் நாடு கடத்துவது நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் வரி விதிப்பது அண்டை நாடுகளுக்கு தொல்லையாக மாறியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் குறைந்த மதிப்பு இறக்குமதிகளுக்கான வரி இல்லாத "டி மினிமிஸ்" (De Minimis) விதியை ரத்து செய்யும் உத்தரவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது சீனா ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. 2025 மே 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த கொள்கை மாற்றம், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் ஓபியாய்டுகள், குறிப்பாக ஃபென்டானில் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின்படி, சர்வதேச அஞ்சல் அமைப்பில் அதாவது ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பார்சல் அனுப்ப வேண்டும் என்றால் வரி, தணிக்கைக்குப் பின்பு தான் அனுப்ப முடியும். ஆனால் அமெரிக்காவில் சர்வதேச அஞ்சல் அமைப்பு கட்டுப்பாட்டிற்கு வெளியே வரி இல்லாத பார்சலை அனுப்ப, அப்பார்சலின் மதிப்பு 800 டாலர் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: டெஸ்லா கார்கள் மீது தொடர் தாக்குதல்..? பயங்கரவாத செயல் என எலான் மஸ்க் புகார்..!

800 டாலருக்கு குறைவாக மதிப்புடைய அனைத்து பொருட்களும் வரியில்லாமல் அமெரிக்காவுக்கு அனுப்ப முடியும், ஆனால் இப்போது சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் அனைத்து பார்சல்களுக்கும் வரிகள் மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். மேலும், சர்வதேச அஞ்சல் நெட்வொர்க் மூலம் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 30% வரியை அல்லது ஒரு பார்சலுக்கு குறைந்தபட்சம் 25 டாலர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், இது 2025 ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு 50 டாலராக உயர்த்தி இரட்டிப்பாக்கப்படும்.

இப்படி சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் அனைத்து பார்சல்களுக்கு வரி விதித்து அமெரிக்கா கல்லா கட்ட உள்ளது. இந்த வழிமுறையைப் பயன்படுத்திப் பல சீனா நிறுவனங்கள் நேரடியாகப் பொருட்களைக் குறைந்த விலையில் அமெரிக்க மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. தற்போது புதிய கட்டணம் மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவது வாயிலாகவும் சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா செக் வைத்துள்ளது.

டி மினிமிஸ் விதி மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 800 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பார்சல் மீது இறக்குமதிகள் வரிகள் அல்லது சுங்க வரிகளுக்கு உட்படுத்தப்படாமல் அமெரிக்காவிற்குள் பொருட்களை அனுப்ப அனுமதித்தது. இந்த விதிமுறை ஆரம்பத்தில் அமெரிக்காவில் வர்த்தக செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும், சிக்கல்களைக் குறைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைப் பயன்படுத்தி உலகளவில் இருக்கும் சிறு வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்குக் குறைந்த கட்டண சரக்கு போக்குவரத்தை எளிதாக்கியது.

ஆனால் இந்த விதியை வெளிநாட்டு விற்பனையாளர்களால், குறிப்பாகச் சீனாவில் உள்ளவர்களால், வரி விதிப்பில் இருந்து தப்பிக்கவும், மலிவான பொருட்கள், போலியான பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களை அமெரிக்கச் சந்தைக்குக் கொண்டு வர பயன்படுத்தப்படும் ஒரு ஓட்டையாக மாறியுள்ளது என்று டிரம்ப் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனாலேயே தற்போது ரெசிப்ரோக்கல் வரி விதிப்புடன் de minimis விதியையும் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதையும் படிங்க: மோசமான நிலையில் எல் சால்வடார் சிறை... டிரம்பால் நிரம்பி வழியும் கைதிகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share