×
 

ரூ.80 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. நடுக்கடலில் நடந்த அதிரடி சேசிங்.. அயன் படத்தை மிஞ்சும் கடத்தல் ப்ளான்..!

சிறிய ரக கப்பல் மூலம் மாலத்தீவிற்கு கடத்த இருந்த 30 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் தான் உலக அளவில் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. போலீசார் எவ்வளவு பாடுபட்டு உள்ளூரில் போதைப்பொருளை ஒழித்தாலும் கடத்தல் கும்பல் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள்களை கடத்தி வந்து, உள்ளூர் மக்களிடையே விற்பனை செய்வது தொடர்கிறது. விமானத்தில் அதிக அளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இருப்பதால் முக்கால்வாசி கொள்ளையர்கள் கப்பலையே தங்களது கடத்தலுக்கு பயன்படுத்து கின்றனர். அதிலும் குறிப்பாக சரக்கு கப்பலில், மற்ற சரக்குகளோடு தங்களது போதைப்பொருளையும் கலந்து கடத்தி வருவதால் அதை கண்டுபிடிக்க முடியாமல் சுங்க அதிகாரிகள் திணறுகின்றனர்.

அதிலும் இதுதான் போதைப்பொருள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத அளவிற்கு விதவிதமாக பல வடிவங்களில் போதைப்பொருள்களை புழக்கத்தில் விட்டுள்ளனர். கஞ்சா செடியாக, புகையிலையாக கடத்திய காலம் போய், அதை செறிவூட்டி கஞ்சா ஆயிலாகவும் கொள்ளையர்கள் கடத்தி வருவதும் தொடர்கிறது. எனினும் கடத்தல்காரர்கள் எவ்வளவு திட்டம் தீட்டி கடத்தல் முயற்சியில் ஈடுபட்டலும், நமது இந்திய கடலோர காவல்படை, சுங்க அதிகாரிகள், காவலர்கள் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு துரத்தி பிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்ற சிறியரக கப்பல் ஒன்றில் இருந்து 30 லிட்டர் செறீவூட்டப்பட்ட கஞ்சா ஆயிலை மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: எமனாகிய தலையணை..! நகைக்காக தாய், மகள் கொலை...!

உலகின் மிகச்சிறிய தீவு நாடுகளில் ஒன்றானதும், ஹனிமூன் கப்பிள்ஸ் அதிகம் தேர்ந்தெடுக்கும் இடங்களில் ஒன்றான மாலத்திவிற்கு தூத்துக்குடியில் இருந்து சிறியரக கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இவ்வாறு ஒரு கப்பலில் தூத்துக்குடி - மாலத்தீவு இடையே கட்டுமான பொருட்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு புறப்பட்டு சென்ற ஒரு கப்பலில் போதை பொருள் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையினரின் உதவியை நாடினர். கடலோர காவல்படை உதவியுடன் அந்த சிறிய ரக கப்பலை நடுக்கடலில் வழி மறித்த அதிகாரிகள், தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டு வந்தனர். பின்னர் அந்த கப்பலுக்குள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஹசீஸ் எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் 30 கிலோ கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 80 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கப்பலில் இருந்த இந்தோனேஷியாவை சேர்ந்த 2 பேர் உட்பட 9 பேர், கடத்தலுக்கு உதவிய 2 பேர் என 11 பேரிடம் விசாரணை நடக்கிறது.  

இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிபுரியும் ஒருவர் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே கடந்த ஜனவரியில் போதை பொருட்கள் கடத்தியதாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உள்பட  4 பேரை மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இப்போது 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் சிக்கி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு துரோகம்... உளவு பார்க்க மாலத்தீவுடன் சீனா போட்ட ஒப்பந்தம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share