சுட்டெரிக்கும் கோடை வெயில்.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு..!
கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வெயில் சுட்டெரிக்கும் பொழுதான பிற்பகலில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவ்வப்போது வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் மற்றும் தண்ணீர் பழக்கடைகள் அதிகரித்துள்ளன. வெயிலின் கோர தாண்டவத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அதிகப்படியாக 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் தான் பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை!
அதன் ஒரு பகுதியாக கரூர் வாங்காபாளையம் பகுதியில் தண்ணீர் பந்தலை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் திறந்து வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள், நீர் மோர், வெள்ளரிக்காய், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார். மேலும் பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்களுக்கு பழம் மற்றும் நீர்மோரை வழங்கினார்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. காவலர்களுக்கு இலவச நீர்-மோர் பந்தல் திறப்பு!